FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on February 02, 2014, 09:16:25 PM
Title:
புலம்ப விடுங்களேன்...
Post by:
Maran
on
February 02, 2014, 09:16:25 PM
புலம்ப விடுங்களேன்...
முன்னும் பின்னுமாய்
முரண்பட்டுக்கொண்டே
நகர்கிறது வாழ்க்கை
இரவின் சலனம்
கனவுகளை நிறைத்தாலும்
விடிகையில்
முகத்தில் ஒட்டிக்கொண்டுதான்.
பனிக்காற்றில்
முகம் கழுவினாலும்
அருவப்பேருருவாய்
காட்டுகிறது என்னை
என் வீட்டுக் கண்ணாடி!!!
Title:
Re: புலம்ப விடுங்களேன்...
Post by:
தமிழன்
on
February 04, 2014, 01:48:30 PM
கண்ணாடியில் ஏதோ கோளாறு மாறன்.. மத்தபடி நீங்களும் உங்கள் கவிதையும் அழகுதான்
Title:
Re: புலம்ப விடுங்களேன்...
Post by:
Maran
on
February 05, 2014, 05:47:04 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FSmile%2Fsmile1112_zps3a5a8cc9.gif&hash=b23222cb8962149f31025042b9c7452edf37477e)