FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: SivA on February 01, 2014, 07:56:45 PM

Title: மனச்சோர்வை சமாளிக்க சில ஈஸியான வழிகள்!!!
Post by: SivA on February 01, 2014, 07:56:45 PM

மனச்சோர்வை சமாளிக்க சில ஈஸியான வழிகள்!!!

எப்படிப்பட்ட வலிமையான மனிதரையும், மனச்சோர்வு எளிதில் வீழ்த்திவிடும். ஆனந்தமும் வேதனையும் கலந்தது தான் வாழ்க்கை. ஆனாலும் மனச்சோர்வுடன் இருக்கும் போது நம் வாழ்க்கையில் நிகழ்ந்த சோகமான காரியங்கள் மட்டுமே நினைவுக்கு வரும். நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாளர்கள், அண்டைவீட்டார், கடவுள் நம்பிக்கை இருக்கிறவர்களுக்கு கடவுள் என நம்முடைய சோகங்களையும், மகிழ்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ளும் பலர், நம் உலகத்தில் இருக்கிறார்கள். மனச்சோர்விலேயே உழன்று கிடப்பதால் சாதிக்கப் போவது ஒன்றும் இல்லை. அதிலிருந்து வெளியே வந்தால், நம்மை போல மனச்சோர்வில் அகப்பட்டவர்களுக்கும் உதவலாம். இதனால் நம்மை போன்ற பிற மனிதர்களுடைய வாழ்க்கையும் இனிமையாக இருக்க வகை செய்யலாம்.

 இத்தகைய மனச்சோர்வில் இருந்து வெளிவருவது எப்படி என்பது குறித்த சில முக்கியமான குறிப்புகளை இங்கே கொடுத்து இருக்கிறோம். நீங்களோ அல்லது உங்களுக்கு அறிமுகமானவர்களோ மனச்சோர்வில் இருந்தால், இவற்றை படிக்குமாறு கூறி, வாழ்வை இனிமையாக்குங்கள்.

(1)உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தை நீக்க சிறந்த வழி உடற்பயிற்சி.

இது நல்ல உடல் அமைப்பை கொடுப்பது மட்டுமின்றி, நேரிடையான சிந்தனைகளையும் அதிகரிக்கின்றது. உணர்வுகளை சீர்படுத்துகின்ற செரோடொனின் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் ஆகியவற்றை சுரக்க உடற்பயிற்சி உதவுகின்றது. அதோடு மனச்சோர்வு அளிக்கும் சிந்தனைகளையும் ஒதுக்கிவிடுகின்றது.

(2)உதவி கேட்பது:

 வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை கையாள உதவி கேட்பதில் எந்த அவமானமும் இல்லை. வாழ்க்கையின் சுமைகளை தனியாக சுமக்க வேண்டும் என்று யாரும் எதிர்பாப்பது இல்லை. ஆகவே தாய், தந்தை, துணைவர், உடன் பணியாளர் அல்லது நண்பர் இடம் இருந்து உதவி கேட்பது உணர்வுச் சுமையை ஓரளவு குறைக்கும்.

(3)சுய விழிப்புணர்வு:

 வாழ்க்கையின் நிகழ்வுகளை சரியாக புரிந்து கொள்ள முடியாமல், தங்களை அளவுக்கு மீறி அழுத்துவதால் மக்கள் பொதுவாக மனச்சோர்வு அடைகிறோம். எனவே சரியாக தம்மை புரிந்து கொண்டு, அதை சந்தோஷமாக விரும்பி செய்தால், மனச்சோர்வானது நீங்கும்.

(4)எடை குறைத்தல்:

 மனச்சோர்வுக்கு அதிகமான எடை பிரச்சனையாக இருந்தால், எடையை குறைக்க முயல்வது ஒரு நல்ல தீர்வைத் தரும். மேலும், உடல் வலிமை ஆரோக்கியத்தையும், சுய கருத்துக்கும் நேர்மறையான சிந்தனையை கூட்டுகின்றது.

(5)நண்பர்கள்:

 நல்ல நண்பர்கள் தேவையான ஆறுதலையும், வாழ்க்கையின் சோர்வூட்டும் சூழ்நிலையில் இருந்து வெளியே வருவதற்கான ஆலோசனைகளையும் வழங்குவார்கள். மேலும், தேவையுள்ள நேரத்தில், சொல்வதை காதுகொடுத்து கேட்கும் நண்பர் இருந்தால், மனதில் இருக்கும் சந்தேகங்களும், எதிர்மறையான சிந்தனைகளும் முற்றிலும் களைந்துவிடும்,.

(6)எதிர்மறையான மக்களிடம் இருந்து விலகி இருப்பது:

 தொடர்ச்சியாக பிறரை குறைத்து பேசுகிறவர்களோடு இருக்க யாருமே விரும்ப மாட்டார்கள். அப்படிப்பட்ட மக்களிடம் இருந்து விலகி இருப்பது மன அமைதியையும், சமாதானத்தையும் கொடுக்கும்.

(7)தனிமையாக இருப்பதை தவிர்ப்பது:

 மனச்சோர்வோடு இருக்கும் போது, தனிமையில் இருந்தால், மனம் மேலும் சோர்வுடன் தான் இருக்குமே தவிர, அமைதியடையாது. அதற்காக எப்போதுமே கூட்டமாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அவ்வாறு நண்பர்களுடன் சேர்ந்து இருந்தால், அவை முழுமையான தீர்வை கொடுக்காவிட்டாலும், மனச்சோர்வு தரும் சிந்தனைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும்.

(8)நேர்மறையான எண்ணங்கள்:

 வாழ்க்கையில் நேர்மறையாக இருப்பதே மனச்சோர்வு கொடுக்கும் சிந்தனைகளை தவிர்ப்பதற்கான சிறந்த வழி. மனதிலே எதிர்மறை உணர்வுகள் இருக்கின்றன. சிந்தனைகளை நேர்மறையான திசையில் செலுத்துவதன் மூலமாக, மனச்சோர்வின் தாக்கங்களை அகற்றிவிடலாம்.

(9)இசையை கேட்பது:

 மனச்சோர்வில் இருக்கும் போது, உணர்வை எழுப்பும் இசையை கேட்பது சோர்வடைந்த மனதிற்கு ஊக்கம் அளிக்கும். உணர்வுகளை மாற்றவும், ஆன்மாவை உயர்த்தவும், உணர்ச்சியை அதிகரிக்கவும் உதவும் ஆற்றல் இசைக்கு இருக்கின்றது. எனினும், மிகவும் உணர்வுபூர்வமான பாடல்களை கேட்பதால், எதிர்மறையான விளைவு ஏற்படும் என்பதால், அவற்றை தடுக்க வேண்டும்.

(10)நிகழ்காலத்தில் வாழ வேண்டும்:

இறந்தகால தவறுகளிலும், எதிர்காலத்தின் நிலையின்மையிலும் உழல்வதில் அர்த்தமே இல்லை. அது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால், அச்சூழ்நிலையில் உங்கள் உணர்வுகளை செலுத்துவது பலன் அளிக்காது. 'எப்போது',‘எங்கே' மற்றும் ‘நாளை' என்பனவற்றுக்கு பதிலாக, 'இப்போது', ‘இங்கே',‘இன்று' என்பனவற்றில் கவனம் செலுத்துங்கள்.

By
S.Siva
FTC Family













l
Title: Re: மனச்சோர்வை சமாளிக்க சில ஈஸியான வழிகள்!!!
Post by: பவித்ரா on February 17, 2014, 03:00:43 PM
nice nalla payanulla thagaval siva arumai ippo irukara thalamuraiku neraya mana sorvu iruku ethunala theriyamale irukanga nice poste