FTC Forum

Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: Global Angel on November 25, 2011, 05:01:15 AM

Title: சிவனுக்கும் இயேசுவின் சிலுவைக்கும் என்ன சம்பந்தம்?
Post by: Global Angel on November 25, 2011, 05:01:15 AM
சிவனுக்கும் இயேசுவின் சிலுவைக்கும் என்ன சம்பந்தம்?

கிருத்துவர்களை ஏன் நீங்கள் சிலுவையை வழிபடுகிறீர்கள் என்று கேட்டால். ஏசு  மக்களின் பாவத்தை கழுவுவதற்காக சிலுவையை ஏற்றுக்கொண்டார். சிலுவையில் அவர் ரத்தம் படிந்ததால் அது புனிதமாயிற்று என்று கூறுவார்கள். (ஒரு சிலர்.) இந்த காரணம் ஒரு விதத்தில் சரியென்றாலும் எனக்கு இதையும் தாண்டி இதில் ஒரு சூட்சுமம் இருப்பதாகவே உணர்கிறேன்.

கிருத்துவர்கள் ஞான ஸ்நானம் எடுக்கும் பொழுதும், பிரத்யேக வழிபாட்டிற்கு  பிறகும் நெற்றியில்  இந்த சிலுவை குறியை பாதிரியார்கள்  மக்களுக்கு இடுவார்கள். அவர் சிலுவையில் அறையப்பட்டார் சரி அதற்க்கு ஏன் நெற்றியில் அந்த சிலுவை குறியை இட வேண்டும்?

 இங்கு தான் சூட்சுமமே உள்ளது. இதை இப்பொழுது அவர்கள் ஒரு சம்பிரதாயமாக உபயோகித்தாலும் இதன் உண்மையான காரணம் சிவனுக்கு மூன்றாவது கண் எனப்படும் நெற்றிக் கண்ணை திறப்பதற்காகவே   இதை செய்கிறார்கள். நெற்றிக்கண்ணின் மூலம் தான் ஒருவன் உண்மயான ஞானத்தை, இறை தரிசனத்தை பெற முடியும்.


ஞான ஸ்நானம் என்பதே ஒருவன்  ஞான பாதைக்கு தயாராகி விட்டான் என்பதை உலகிற்கு உணர்த்த தான். இதில் வேதனை என்னவென்றால் இது ஒரு சம்பிரதாயமாகவே இருக்கிறதே தவிர அவர்களை பாதிரியார்கள் அடுத்த கட்டத்திற்கு  கொண்டு செல்வதில்லை.அதற்க்கு காரணம் அவர்களின் அறியாமை தான்.  அடுத்த கட்டம் எனபது தியானம் செய்வதாகும். இந்த தியானம் யோகம் இவற்றை இந்துக்களுடையது என்று சொல்லி பாதிரியார்கள்  செய்ய அனுமதிப்பதில்லை.

நெற்றிக்கண் திறக்கும்  பொழுதோ அல்லது எப்பொழது மூச்சானது  மூக்கு வழியாக வராமல் நின்று போகிறதோ  அப்பொழுது அந்த உச்ச கட்டடத்தில்  இந்த சிலுவையை நெற்றியில்   காண முடியும்.

 எவன் ஒருவனுக்கு மூக்குக்கு கீழே மூசச்சு வருவதில்லையோ அவனே உண்மையான தீர்க்க தரிசி என்று ஏசு கூறியிருக்கிறார். எப்பொழுது ஒருவனுக்கு மூச்சுக்காற்று  மூக்கு வழியாக  வராது எனில் அது எப்பொழது சுழுமுனை வழியாக செயல்படுகிறதோ அப்பொழுது.

ஏசு ஒரு யோகி என்று சொல்வதற்கு இந்த ஒரு சான்று மட்டுமே போதுமானது.

சிவனுக்குள்ளது  போல் நெற்றிக்கண் திறப்பதற்காகவே நெற்றியில் சிலுவை இடப்படுகிறது எனபதே என் கருத்து