FTC Forum
Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: Global Angel on November 25, 2011, 04:59:03 AM
-
மதுவிற்கும் தியானத்திற்கும் சம்பந்தம் உண்டா?
மது அருந்தியவர்கள் எங்கோ பறப்பதுபோல் உள்ளது என்று கூறுவதை கேள்வி பட்டிருப்பீர்கள். அதுபோல் தியானம் செய்பவர்களும் உணர்ந்திருப்பார்கள். மதுவினால் அடையும் இந்த அளவான உற்சாகத்தை தான் ராஜ போதை என்பர்.
உண்மையில் தியானம் மூலம் அடையும் உற்சாக அமைதி நிலையை ஓரளவிற்கு மதுவினாலும் அடையலாம். மதுவிற்கும் தியானத்திற்கும் என்ன வித்தியாசம் என்றால் அளவோடு இருக்கும் வரை தான் மது ஓரளவிற்கு உற்சாக அமைதி நிலையை தரும் அளவுக்கு மிஞ்சினால் அது தன்னிலை மறக்க செய்து கெடுத்து விடும்.
மேலும் மதுவானது உடலில் தீங்கையே வரவழைக்கும் ஆனால் தியானமோ நன்மையை வாரி வழங்கும்.
மது நரம்பு தளர்ச்சியை வரவைக்கும், ஆண்மை குறைவை ஏற்படுத்தும், மூளையை மழுங்கச்செய்யும் ஆனால் தியானமோ உடலையும் உள்ளத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். அறிவை விசாலமாக்கும். ஆண்மையை அதிகப்படுத்தும் தியானங்களும் உண்டு.
ஆதலால் உடலை சீரழிக்கும் மதுவை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட்டு(அல்லது அளவோடு வைத்துக்கொண்டு) தியானம் செய்யுங்கள். தியானத்திற்கு நீங்கள் அதிகம் செலவு செய்ய தேவை இல்லை, சைடிஷ் தேவை இல்லை. நினைத்த நேரத்திற்க்கெல்லாம் இன்பம் அனுபவிக்கலாம்.
ஆதலால் தியானம் செய்வீர் திறம்பட வாழ்வீர். வாழ்க வளமுடன் நலமுடன்
-
// மது நரம்பு தளர்ச்சியை வரவைக்கும், ஆண்மை குறைவை ஏற்படுத்தும், மூளையை மழுங்கச்செய்யும் //
ithu theriyaama palar mathu arunthurathu thaan aanmai nu nenaichutu irukanga