FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on January 27, 2014, 03:41:23 PM
-
அடடா !
ஈதென்ன காட்சி !
கண்கள் கண்டிறா
கண்கொள்ளா கவின்மிகு காட்சி
மலர்கள் கண்காட்சியினை
மேற்பார்வையிடவோ
மலர்களின் மானசீக தலைவி ,
மாற்று மாநிலமாம்
பெங்களூருவில் ..!
************************************************
காலகாலமாய் காணவருபவர்
கண்களோடு கலவையாய்
மனதையும் குளிர்ந்திட செய்திடும்
கண்கவர் லாலபாக் பூக்களில்
ஒற்றை பூ மட்டும்
மாறுவேசம் பூண்டு
வேறுவேசத்தினில் மெல்ல
கோவைக்கு இடம்பெயர்ந்திட
கூட்டத்தோடு கூட்டமாய்
காத்துகிடக்கையில்
மாட்டிக்கொண்டதுவோ
நேற்றைய நாளிதழில் !
************************************************** ***********
லட்சப்பூக்களின் உச்சப்பட்ச
அணிவகுப்பின் அழகினில்
மிச்சம் சொச்சம் ஏதுமில்லா
உச்சம் நாங்கள் தானென
தமிழகம் தவிர இந்தியாவுக்கே
அங்கலாய்ப்பாய் அறிவித்துக்கொள்ளும்
அப்பாவி லால் பாக் பூக்களினை
போகிறபோக்கினில் ஓரப்பார்வையில்
தன் மறையா இன்முகம் புறம்காட்ட
உன் முன் ,
அழகின் எச்சங்களே நாங்கள் என
லட்ச பூக்களையும் ஒப்புதல்
வாசிக்க வைத்தது நீயடி ...
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fs30.postimg.org%2F43774m2v1%2F1812014_FE_1801_MN_14_Cbe3571.jpg&hash=4e3dab6036c6b9849ec5962aa2ea4988855bc46d) (http://postimg.org/image/43774m2v1/)