FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on January 26, 2014, 07:23:11 PM

Title: ~ லெட்டூஸ் கீரையின் மருத்துவ குணங்கள்:- ~
Post by: MysteRy on January 26, 2014, 07:23:11 PM
லெட்டூஸ் கீரையின் மருத்துவ குணங்கள்:-

(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-prn1/923072_676830799005905_175757657_n.jpg)


கீரை வகைகளில் சிறந்த உணவாக லெட்டூஸ் கருதப்படுகிறது. இது இலை கீரையாகும். இதனை பச்சடிக்கீரை, சாலட்டுக்கீரை என்றும் கூறுவர். இதன் பிறப்பிடம் இந்தியா தான். இந்தியர்களை விட இக்கீரையை ஐரோப்பியர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

* இந்தக் கீரையானது இமயமலைச்சாரலில் ஏராளமாக தன்னிச்சையாக வளரக் கூடியது. பூப்பதற்கு முன்னுள்ள இலைகளே உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது.

இலைகள் நீண்ட முட்டை வடிவமுள்ளதாய் இருக்கும்.

* சில வகைகள் சுருள் சுருளான இலை அமைப்பை பெற்றிருக்கும் இலைகள் தடிப்பாக இருக்கும். சாறு நிறைந்து மிக மென்மையாக இருக்கும். பச்சை நிறம்

கீரை வகையைச் சார்ந்தது.

* சாலட்டுகளில் அழகுக்காக சேர்க்கப்படுவது எனினும் வைட்டடமின்'ஈ' சத்தும், அதிகப்படியான தாது உப்புகளும் நிறைந்து காணப்படுகின்றன. புற ஊதாக்கதிர்

மற்றும் சூரியக்கதிர் தாக்கத்திற்குட்படும் சருமத்திற்கு நிவாரணமளிக்கிறது.

* புரதம், தாது உப்புகள், வெப்ப ஆற்றல் முதலியன மிகுந்த கீரை, சிவப்பு அணுக்களைத் தோற்றுவிக்கும் ஒரு வித சத்து இக்கீரையில் இருக்கிறது. இக்கீரை

உடலுக்கு குளிர்ச்சியையும், உற்சாகத்தையும் தரவல்லது.

* சமையலில் இனிய மணத்துக்காகவும், சுவைக்காகவும் பலர் இதனை விரும்பி உண்கின்றனர். முதிர்ந்த இலைகளைக் கால்நடைகள் விரும்பி உண்கின்றன.

பெண்கள் இதை சாப்பிட்டு வந்தால் அழகுக்கூடும்.

* மூச்சிரைப்பு நோயான ஆஸ்தும்£வைக் கண்டிக்க வல்லது. இதிலுள்ள மாவுச்சத்து காரணமாக உடல்பருமனைக் குறைப்பதற்கு இந்தக் கீரையை உணவுடன்

சேர்த்துக் கொள்வார்கள். நீரிழிவு நோய்க்கு நல்ல பத்திய உணவு இக்கீரையாகும்.