FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: sameera on January 25, 2014, 07:52:54 PM

Title: கனா கண்டேன்!கண்டு கொண்டேன்!!
Post by: sameera on January 25, 2014, 07:52:54 PM
பூ வாசம் உன்மீது கண்டேன்,
தேனாய் உன்னுள் இருக்க ஆசை கொண்டேன்...
அழகிய ரோஜா மலராய் உன்னை கண்டேன்,
உன்னை காக்கும் முட்களாய் இருக்க ஆசை கொண்டேன்...
கரை தொடும் ஓடமாய்  உன்னை கண்டேன்,
அதில் மீனாய் இருக்க ஆசை கொண்டேன்...!

உன் அருகினில் நான் இருக்க ஆசை கொண்டாய்,
நினைவாலே உன்னில் கலந்திருப்பேன் என்று உறுதி கொண்டேன்...
கனாவில் என்னுடன் வாழ்ந்திட ஆசை கொண்டாய்,
அன்பே உன்னில் கரையவே ஆசை கொண்டேன்...
மௌனமே என்னிடம் வேண்டாம் என்றாய்,
மௌனத்தில் உன் சிரிப்பு வசீகரித்தது என்னை....!

நான் உடலாகவும்..,
நீ உதிரமாகவும்...,
நாம் இருந்தோம் உயிரே!

இன்று உனது நீண்ட மௌனத்தின் மொழிகளினால்,
என்னுள் காயம் கண்டேன்..,
உதிரமாக இருந்த நீயோ பிரிய கண்டேன்.,,,
உயிர் தேயும் துளிகளை கண்டு கொண்டேன்!!!
Title: Re: கனா கண்டேன்!கண்டு கொண்டேன்!!
Post by: Maran on January 26, 2014, 02:03:09 PM

நான் உடலாகவும்..,
நீ உதிரமாகவும்...,
நாம் இருந்தோம் உயிரே!


அருமையான வரிகள்!  நல்ல உவமை,  பாராட்டுகள் சமீரா தோழி.
Title: Re: கனா கண்டேன்!கண்டு கொண்டேன்!!
Post by: sameera on January 27, 2014, 07:18:01 PM
நன்றி தோழா!