FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on January 25, 2014, 04:55:50 PM

Title: என் பன்னீர் மேகமே !!
Post by: aasaiajiith on January 25, 2014, 04:55:50 PM
தக்காளியின் விதையினையும்
அளவினில் விஞ்சிடாத வகை
தற்காலிக பிரிவாய்,எனை நீங்கி
சிறு தொலைவே சென்றிருக்கும்
என் மனச்சோலையின் வண்ணத்துபூச்சியே !
உனை எண்ணி எண்ணி
என் எண்ணத்தினை அத்தனையும்
இதோ சிறகடிக்கவிடப்போகிறேன் !

வெளி விரைந்திடும்
அவ்வெண்ணங்கள் அத்தனையும்
வெறும் எண்ணங்களாய் அன்றி
என் அருங்காதலை சுமந்திட்ட
சிறப்பு சிறு சின்னங்களாய்
என்னவளை தேடி தேடி தினம்  பறந்து
அவளின்  நலம்தனை தெளிவாய் அறிந்து 
சோவியத் யூனியனின் "ஸ்பூட்னிக்"
செயர்க்கைகோள் போல செயல்பட்டு
மிகமிக துரிதமாய் தகவலை அனுப்பிடும்

ஆதலால் ஆசைக்குரிய அன்பே !
என்மீதான மிகைமிகு காதலால்
எனை நீங்கி சென்றதாய் எண்ணி
மனக்கண் கலங்கிடும் பன்னீர் மேகமே
வருத்தத்தின் வீண் கண்ணீரினை
உடனே நிறுத்தம் செய்திட்டு 
திருத்தமாய் வழக்கம் போல்
பன்னீரை பொழிந்திடுவாயா
என் பன்னீர் மேகமே !!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fs29.postimg.org%2Flxf5cj8b7%2Frain.jpg&hash=e87975e900b920bec8664b5c189e523fa15e5df9) (http://postimg.org/image/lxf5cj8b7/)
Title: Re: என் பன்னீர் மேகமே !!
Post by: Maran on January 26, 2014, 01:56:49 PM
என்மீதான மிகைமிகு காதலால்
எனை நீங்கி சென்றதாய் எண்ணி
மனக்கண் கலங்கிடும் பன்னீர் மேகமே
வருத்தத்தின் வீண் கண்ணீரினை
உடனே நிறுத்தம் செய்திட்டு 
திருத்தமாய் வழக்கம் போல்
பன்னீரை பொழிந்திடுவாயா
என் பன்னீர் மேகமே !!


அடடா !! அருமையான வரிகள் !...

Title: Re: என் பன்னீர் மேகமே !!
Post by: aasaiajiith on January 26, 2014, 04:27:49 PM
வாழ்த்தியமைக்கு நன்றி !!
அதிலும் பிடித்த வரிகளை
அடிக்கோடிட்டு வாழ்த்திய விதம்
வசீகரம் !!!