FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: RemO on November 24, 2011, 12:02:36 PM
-
வயதானாலும் இளமையாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களா நீங்கள்?. அப்படியெனில் எதையுமே நேர்மறையாக எண்ணுங்கள் என்கின்றனர் வல்லுநர்கள். சத்தான உணவை உண்டு, சந்தோசமாக இருந்தால் என்றைக்கும் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கலாம் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரை
நோயற்ற வாழ்வு
புகை, மது ஆகியவற்றை அறவே தவிர்க்க கூறும் வல்லுநர்கள் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம் என்கின்றனர் வல்லுநர்கள். அதோடு சரிவிகித உணவை உட்கொண்டால் நோயற்ற வாழ்வை வாழலாம் என்கின்றனர் உணவியலாளார்கள் அவர்கள் கூறும் ஆரோக்கிய டிப்ஸ் உங்களுக்காக:
கால்சியம் சத்து
வயதாக வயதாக அதிகம் பாதிக்கப்படுவது எலும்புகளும், பற்களும்தான். கால்சியப் பற்றாக்குறையினால் லேசாக தடுக்கி விழுந்தாலே எலும்புகள் பாதிக்கப்படுகின்றன. எனவே நாம் உண்ணும் உணவில் கால்சியம் சத்துள்ள உணவை அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பால் பொருட்கள், சீஸ், வெண்ணெ ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
புரதச்சத்துள்ள சோயாபீஸ்சை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது தசைகளின் வளர்ச்சிக்கு உதவும். நாம் உண்ணும் உணவில் சரிவிகிதமாக புரதச்சத்து உள்ள பயறுவகைகள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
கண்களுக்கு கவனம்
கண்களை கவனமாக பார்த்துக்கொள்ள வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்த உணவுகளை சாலட் களாக செய்து உட்கொள்ள வேண்டும். இதனால் கண்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் என்பது வல்லுநர்களின் அறிவுரை.
பாப்கார்ன் கொறிப்பது இதயத்திற்கு இதமானது என்கின்றனர். மக்காச்சோளத்தில் செய்யப்படும் பாப்கார்ன், பயறுவகை உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பது உணவியலாளர்கள்
நேர்மறை எண்ணங்கள்
இந்த உணவுகளை அரைத்து சத்துக்களை ஒவ்வொரு பகுதிக்கும் அனுப்ப தண்ணீரை அவசியம் அருந்த வேண்டும் என்கின்றனர் உணவியலாளர்கள். தவிர நம்மிடம் தோன்றும் நேர்மறை எண்ணங்கள் நமக்கு எந்த வித நோயும் தாக்காமல் உடல் நலத்தை காக்கும் என்றும் உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். என்ன அவர்கள் கூறியது சரிதானே. எந்த விசயத்தையுமே நெகடிவாக பார்க்காமல் பாஸிட்டிவாக பாருங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள்
-
பாப்கார்ன் கொறிப்பது இதயத்திற்கு இதமானது என்கின்றனர்.
நல்ல தகவல்கள் ரெமோ ..... ஆனால் பொப்கோர்ன் சாப்டா குண்டாக ஆகுவங்கன்னு சொல்லுவாங்க ..... நீங்க இப்டி சொல்லி இருக்கீங்க ... இனிக்குதான் இந்த தகவலை தெரிந்து கொண்டேன் நன்றி .
-
thanks angel