உயிர் காக்கும் ஒற்றை க்ளிக்!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fav%2F2014%2F01%2Fyjyyjq%2Fimages%2Fp86c.jpg&hash=c9e3d8ea98caa844bd1042288e3ecd548109d72e)
- www.friends2support.org (http://www.friends2support.org)
ரத்த தானத்துக்கு எனப் பிரத்தியேகமாக இயங்கும் வலைதளம். என்ன வகையான ரத்தம், எந்த ஊரில், எந்த ஏரியாவில் தேவைப்படுகிறது என்பதை இங்கு பதிந்தால், அருகில் வசிக்கும் ரத்த தான ஆர்வலர்கள் பலரின் தொடர்பு எண்களை உடனடியாக வழங்குகிறார்கள். சம்பந்தப்பட்டவர்களை நேரடியாக நாமே தொடர்புகொண்டு ரத்தத்தைத் தானமாகப் பெறலாம். டெல்லி, மும்பை, சென்னை... என இந்தியா முழுக்கப் பரந்துவிரிந்த சேவை அளிப்பது இந்தத் தளத்தின் ஸ்பெஷல். 2005-ல் 200 ஆர்வலர்களுடன் தொடங்கப்பட்ட தளத்தில் இப்போது லட்சக்கணக்கில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் 1.5 லட்சம் பேர் ரத்த தானம் செய்திருப்பது, தளத்தின் சக்சஸ் ரேட். ஐ போன், ஜாவா, விண்டோஸ், ஆண்ட்ராய்டு என விதவிதமான அலைபேசிகளில் இயங்கும் 'ஆப்’களை தரவிறக்கி, அதிலும் இந்தச் சேவையைப் பெறலாம். ஒரு முறை ரத்த தானம் செய்த நபரின் பெயர் அடுத்த 90 நாட்களுக்கு தளத்தில் இடம் பெறாது எனப் பலப்பல வசதிகள். ஒற்றை க்ளிக்கில் உயிர் காக்க உதவும் தளம்!