FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on November 24, 2011, 06:05:50 AM

Title: தணித்துவிடு
Post by: ஸ்ருதி on November 24, 2011, 06:05:50 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fth09.deviantart.net%2Ffs71%2F150%2Fi%2F2010%2F079%2F4%2Ff%2FDreaming_of_you__by_addy_ack.jpg&hash=db590fb2eb9de3e26da15fbe69a4647faf7c3d4a)
ஆசை கொண்ட உள்ளம்
உன்னைத் தேட
தவிப்பை உணர்த்தி
செய்தி அனுப்ப
உன்னிடம் மௌனம் காண
தாங்க இயலா கோபத்தோடு
தனிமையில்
அமைதி காத்திருக்க
தேடல் அறிந்தாயோ??
இன்ப அதிர்ச்சியாய்
என்னை தேடி நீயும் வர
அளவில்லா சந்தோசம்
என்னுள்..
அன்பாய் பேசி
ஆறுதல் மொழி கூறி
அரவணைத்து
செல்லமாய் கொஞ்சி
உன் ஆசையாய்
வெளிக்காட்ட
தாங்க முடியாது துடிக்க
உன் கொஞ்சல் மொழியில்
நாணத்தில் சிவக்க
ஆசையோடு அள்ளி
அணைக்க நினைத்து
அருகில் வர
தலையணை தவறி
விழுந்து தடுமாற்றமாகி
கண்திறந்து பார்கையில்
எல்லாம் கனவாக முடிய
முடிந்த கனவு தொடராமல்
தவிப்பை தொடர
மீண்டும் கோபம்
உன் மீதே வர
வந்து விடு ஒருமுறை..
கனவை நிஜமாகி
முத்தமொழிகளால்
கோபத்தை தணித்துவிடு :-*  :-* ;) ;) ;)
Title: Re: தணித்துவிடு
Post by: RemO on November 24, 2011, 11:27:48 AM
nice one shur

ama call pani kupitu paru vanthalum varuvaar
Title: Re: தணித்துவிடு
Post by: aasaiajiith on November 24, 2011, 12:54:19 PM
கிளம்பித்தான்விட்டேன்  நிஜத்தில்
முத்தமொழியை மொத்தமாய்  பிரயோகபடுத்தி
சுத்தமாய் உன் கோபம் தணித்திட     
கனவிற்கே இத்துனை கலவரமா?
நல்லவேலை நாசூக்காய் சொல்லிவிட்டாய்
நிஜத்தில் வரவிருந்த  எண்ணத்தை ஒத்திவைத்து   
கொஞ்சும் கூட உன் மனம் கனிவாய் ஆகட்டும்
என ஆசையோடு காத்திருக்கும்   முடிவினோடு
இப்போதைக்கு சத்தமில்லாமல் தனித்துவிடுகிறேன்
Title: Re: தணித்துவிடு
Post by: ஸ்ருதி on November 24, 2011, 04:46:56 PM
adey Emo ithu kanavu da :@ nijam illai...
en Friendku Nan eluthi thanthathu :$ avanga love ku nan help pannen...
Mathapadi ithu verum poem than :| nan kupidala yaraium
Title: Re: தணித்துவிடு
Post by: RemO on November 24, 2011, 06:54:21 PM
hey shur just kidding
dont take it seriously
Title: Re: தணித்துவிடு
Post by: Global Angel on November 25, 2011, 01:05:57 AM
நல்ல கவிதை சுருதி ...

கனவுகள் நிஜமானால்
காதல் தோல்விகளும் வரா ..
இந்த கவிதை கிருகல்களும் பெறா....