கார்ன் சீஸ் கச்சோரி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F09%2Fyzuzyz%2Fimages%2Fp72a.jpg&hash=8218b3ac16ec45c4c64069063ee37bd26b2e6106)
தேவையானவை:
மைதா - ஒரு கப், ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - ஒரு கப், சீஸ் - 100 கிராம், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எலுமிச்சம் பழம் - அரை மூடி, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மைதாவுடன் உப்பு, சிறிதளவு எண்ணெய், தேவையான நீர் விட்டு நன்றாக அடித்துப் பிசைந்து, ஊறவிடவும். ஸ்வீட் கார்ன் முத்துக்களை கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு... இஞ்சி - பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், அரைத்த கார்ன் சேர்த்து வதக்கவும். உப்பு, எலுமிச்சை சாறு கலந்து இறக்கி ஆறவிடவும். சீஸை துருவி இதனுடன் சேர்க்கவும்.
மைதாவை சிறு பூரிகளாக திரட்டி, சோள கலவையை வைத்து மூடி, அதிக அழுத்தம் தராமல் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
கார்ன் - சீஸ் கச்சோரி:
ஸ்வீட் கார்னுக்கு பதில், ஊற வைத்து, வேக வைத்த கொண்டைக்கடலையை வைத்தும் தயாரிக்கலாம்.