FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Global Angel on November 23, 2011, 10:00:17 PM

Title: புதிய தலைமுறையின் கண்டுபிடிப்புகள்
Post by: Global Angel on November 23, 2011, 10:00:17 PM
நாய்க்கு நாலுகால் இருக்கலாம் ஆனா அதனால லோக்கல் கால் எஸ்.டி.டி. கால், மிஸ்ட் கால் பண்ணமுடியாது.

கங்கை ஆத்துல காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம், ஆனால் ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா?

திருவள்ளுவர் 1330 குறள் எழுதியிருந்தாலும் அவரால் ஒரு குரலில்தான் பேச முடியும்.

என்னதான் தலை சுத்தினாலும் முதுகை பார்க்க முடியாது.

மீன் பிடிக்கிறவனை மீனவன் என்று சொல்லலாம், நாய் பிடிக்கிறவனை நாயன் என்று சொல்ல முடியுமா?

என்னதான் குண்டாக இருந்தாலும் அவரை தூக்கி துப்பாக்கிகுள்ள போட முடியாது.

தேள் கொட்டினா வலிக்கும் முடி கொட்டினா வலிக்குமா?

ஸ்கூல் டெஸ்டுல பிட் அடிக்கலாம் காலேஜி டெஸ்டுல பிட்டு அடிக்கலாம் blood டெஸ்டுல பிட் அடிக்க முடியுமா?

பொங்கலுக்கு கவர்மென்ட்ல லீவு கொடுப்பாங்க ஆனா இட்லி தோசை கொடுப்பாங்களா?

கோலமாவில் கோலம் போடலாம், கடலைமாவில் கடலை போடா முடியுமா?

லைபுல ஒண்ணுமே இல்லன்னா போரடிக்கும், தலைல ஒண்ணுமே இல்லன்னா க்ளார் அடிக்கும்.

ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிட பணமிருந்தாலும் பாஸ்புட் கடையில் நின்னுக்கிட்டுதான் சாப்பிடணும்.

இஞ்சினியர் காலேஜில படிச்சா இஞ்சினியர் ஆகலாம். பிரசிடென்சி காலேஜில படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம்வரும் ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது.

வாழைமரம் தார் போடும் ஆனா அதை வச்சு ரோடு போடா முடியுமா?

ஹான்ட் வாஷ் என்றால் கை கழுவுவது பேஸ் வாஷ் என்றால் முகம் கழுவுவது பிரைன் வாஷ் என்றால் ப்ரைனை கழுவுவதா?

டீ கப்ல டீ இருக்கும், வேர்ல்ட் கப்ல வேர்ல்ட் இருக்குமா?

பால்கோவா பாலிலிருந்து பண்ணலாம். ஆனா ரசகுல்லா ரசத்திலிருந்து பண்ணமுடியாது.

பல்வலி வந்தா பல்ல புடுங்கலாம், தலைவலியோ கால்வலியோ வந்தா தலையோ காலையோ புடுங்க முடியுமா?

சண்டே அன்னிக்கு சண்டைப்போட முடியும் ஆனா மண்டே அன்னிக்கு மண்டையப் போடா முடியுமா?
Title: Re: புதிய தலைமுறையின் கண்டுபிடிப்புகள்
Post by: RemO on November 23, 2011, 10:17:00 PM
ha ha super