FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on November 23, 2011, 09:52:02 PM
-
எனது ஹைக்கூ
அறிவை முதலீடு
செய்தவனுக்கு
அறிவு பெருகிற்று.
பணத்தை முதலீடு
செய்தவனுக்கு
பணம் பெருகிற்று.
அறிவு பணம் முதலீடு
செய்தவனுக்கு
பட்டமும் பதவியும் கிடைத்தது.
பொய்யை முதலீடு
செய்தவனுக்கு
வெறுமை கிடைத்தது.
விதை எதுவோ
செடியும்
அதுவே?
விதை தீமை
அறுவடை
தீமை.
உயர உயர பறந்தாலும்
குருவி தரைக்கு
வந்தேதீரும்.
உயர விவேகம்
அதி விவேகம்
வீழ்ச்சி.
வெற்றியும் மகிழ்ச்சியும்
தொடரும் போது எதிர்பாரா
துயரும் தோல்வியும் காத்திருக்கும்.
சுகத்தில் முழ்கி கிடக்கும்
தருணம் வாயிலில்
காத்திருக்கும் துயர்.
உயர உயர ஏறிச்செல்லும்
பாதையின் மறுபக்கம்
பாதாளமும் இருக்கும்.
ஒளியின்
மறுபக்கம்
காரிருள்.
பூமியில் ஆனந்தம்
நித்தியம் என்று
யார் சொன்னார்.
நித்திய ஆனந்தம்
இறைவனடி
சேர்த்தல் அன்றோ.
-
very nice