FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Global Angel on November 23, 2011, 09:45:20 PM

Title: இணையதள கிரிமினல்கள்
Post by: Global Angel on November 23, 2011, 09:45:20 PM
இணையதள கிரிமினல்கள்  


திறந்திருக்கும் வீட்டில் நாய் நுழையும் என்பார்கள், திறந்திருக்கும் வீட்டிலும் பூட்டியிருக்கும் வீட்டிலும் திருடர்களும் கொள்ளை, கொலைகாரர்களும்தான் நுழைகிறார்கள்.

வீட்டில் மட்டுமில்லை, அடுத்தவரின் பதிவில் வைரஸ் கிருமிகளை நுழைத்து வேறு வேலைவெட்டி ஏதுமில்லாமல் எப்போது பதிவை திறந்தாலும் அதில் அவர்களின் 'அதிவீர' விளையாட்டுகளை இணைத்து நுழையவிட்டு வேடிக்கை பார்க்கும் வேலையற்ற முடவர்கள்.

இவர்களுக்கு இணையதளத்தையே தாங்கள் கைக்குள், கட்டுபாட்டிற்குள் வைத்திருக்கின்றோம் என்கிற பெருமை போலும்!! எந்நேரமும் இணையதளத்தில் ஏடாகூடம் எதையாவது அரங்கேற்றிய வண்ணம் இருப்பது மட்டும் தான் இவர்களின் 'வீர செயல்'.

சோற்றுக்கு பணம் சம்பாதிப்பதும் இணையதளத்திலேயே பல் துலக்ககூட சமயமின்றி மெத்தை போட்டு உறங்குவதும் கூட keyboard மீதுதான். வக்கிர புத்தி மிக்க இந்த கயவர்கள் திருடும் வீடுகளைக்கூட இணையதளம் மூலம் தான் குறி வைக்கின்றார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. இதற்குப் பின்னால் ஒரு பெரிய சதி கும்பல் இருந்து செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் கூட ஆச்சரியப்படுவதற்க்கில்லை, தொடரும் இவர்களின் இந்த செயல்கள் மூலம் சந்தேகத்தை உறுதிபடுத்துவதாகவே உள்ளது.

"போயி வேற வேலைய பாருடா.......புத்தி இல்லாத முடவனே" என்று சொல்லத்தூண்டுகிறது இவர்கள் இணையதளத்தில் ஆடுகின்ற கொலைவெறியாட்டம்.
Title: Re: இணையதள கிரிமினல்கள்
Post by: RemO on November 23, 2011, 10:23:27 PM
 ::) ::) ::) ::) ::) ::)
Title: Re: இணையதள கிரிமினல்கள்
Post by: Global Angel on November 24, 2011, 08:42:12 PM
தகவலில் தப்பு ஏதும் இருக்கின்றதா ....?
Title: Re: இணையதள கிரிமினல்கள்
Post by: RemO on November 25, 2011, 01:14:13 AM
no no apadi ethum ila angel