FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Global Angel on November 23, 2011, 09:21:59 PM

Title: குர்காக்கள், கங்காணிகள்
Post by: Global Angel on November 23, 2011, 09:21:59 PM
குர்காக்கள், கங்காணிகள்  
இரவு நேரங்களில் வீடுகளின் வாசலிலிருக்கும் கேட்டை கொம்பினால் தட்டிவிட்டுச் செல்லும் குர்காக்களை பற்றி யாவரும் அறிந்திருக்கிறோம் ஆனால் அப்படி அவர்கள் தெருத் தெருவாக தட்டி விட்டு செல்வதால் திருடனோ மற்ற சமூக விரோதிகளோ வீடுகளில் திருட வருவதில்லையா என்று கேட்டால் அது எப்படி ஒரு கொம்பின் உதவியுடன் திருடனை குர்க்காவால் பிடிக்க முடியும் என்று பதில் சொல்லிவிடலாம், அப்படியென்றால் குர்காக்கள் ஏன் இரவில் தெருதெருவாக அலைய வேண்டும் என்ற கேள்வி மிஞ்சும்.

எனக்கு கிடைத்த செவி வழி செய்தி, இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்ச்சியில் இருந்த சமயத்தில் அண்டை நாடான நேபாளத்திலிருந்து வந்த குர்காக்கள் இந்தியர்களுடன் இணைந்து ஆங்கிலேயரிடம் போராடி நாட்டை ஆங்கிலேயர்களிடமிருந்து விடுவிக்க பெரிதும் உதவியதாகவும் ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுச் சென்ற பின்பு, அவர்கள் பெரும்பாலானோர் படித்திராமல் இருப்பதால் காவலர் வேலையை செய்து பிழைப்பு நடத்த உரிமை கொடுக்கப்பட்டதாகவும், அவர்கள் தங்களது வேலையை பொறுப்புடன் செய்வதால் அவர்களை தொடர்ந்து அவ்வேலைகளில் அமர்த்தப்பட்டதாக தகவல் சொல்லி கேட்டிருக்கிறேன்.

ஆனால் சில திருடர்களும் சில போலீஸ்காரர்களுக்கும் சில சமயங்களில் இவர்கள் உதவிகரமாக இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது, எது எப்படி இருந்தாலும் இந்த குர்காக்கள் இரவில் தட்டிவிட்டு செல்வதனால் திருடர்களும் சமுதாய விரோதிகளும் இரவில் நடமாடாமல் இல்லை என்பது உறுதி. ஒவ்வொரு வட்டாரத்திலும் போலீசுக்கு கங்காணிகள் இருப்பதால் எங்கு என்ன நடக்கிறது என்கின்ற தகவல்கள் போலீசுக்கு கிடைத்துவிடுவதற்க்கு உதவியாக இருந்துவிடும். கங்காணிகளை எளிதில் கண்டுபிடித்து விட முடிகிறது, இதனால் இடம் விட்டு இடம் புதிதாய் வருகின்ற சமூக விரோதிகளும் திருடர்களும் மட்டுமே கங்காணிகள் யாரென்று அறியாமல் போக வழியுண்டு, ஏனையோர் குறிப்பாக சமூகவிரோதிகள், திருடர்கள், தவறான முறையில் நடந்து கொள்ள சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருப்பவர்கள் இந்த கங்காணிகளையும் விரைவிலேயே இனம் கண்டுகொள்கின்றனர் என்பது நமக்கு நன்கு புரிகிறது.

சந்தேகத்துக்குரியவர்களின் நடமாட்டமென்பது சகஜமாகிவருகின்ற சூழல் தற்போது எங்கும் காணப்படுகிறது, சந்தேகத்திற்க்குரியவர்கள் தங்களை யாரும் இனம் கண்டு கொள்ளாமல் இருக்க எடுத்துக் கொள்ளும் முயற்ச்சிகளும் ஏராளம். குர்காவின் எதிரிலேயே ஒருவன் ஒரு வீட்டின் சுவற்றின் மீது ஏறி குதித்தாலும் கூட குர்க்காவால் ஒன்றும் செய்ய இயலாமல் பார்க்காதவன் போல நடந்து போய்விடதான் செய்வான். கங்காணிகள் எவற்றைப் பற்றி விவரம் சேகரிப்பார்கள் என்பது நமக்கு தெரிவதற்கில்லை, என்றாலும் அந்தந்த வட்டாரத்தில் இருக்கும் சமூக விரோதிகளுக்கு நிச்சயமாக அங்குள்ள கங்காணி யாரென்பதும் தெரிந்துதான் உள்ளது, இதனால் பல குற்றங்கள் நடப்பதை தவிர்க்க இயலாமல் போய்விடுகிறது.
Title: Re: குர்காக்கள், கங்காணிகள்
Post by: RemO on November 24, 2011, 11:31:40 AM
naan chinna vayasula parthathu
ipala irukangala
Title: Re: குர்காக்கள், கங்காணிகள்
Post by: Global Angel on November 24, 2011, 08:34:04 PM
கூர்காகள் தான் ... வாட்ச்மேன் :)
Title: Re: குர்காக்கள், கங்காணிகள்
Post by: RemO on November 25, 2011, 01:15:23 AM
apadiya  :o
ithu puthu kathaiya la iruku