FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Global Angel on November 23, 2011, 08:22:59 PM

Title: பெண்களுக்கு சில டிப்ஸ்
Post by: Global Angel on November 23, 2011, 08:22:59 PM
பெண்களுக்கு சில டிப்ஸ்  

நல்ல மருத்துவரிடம் உடலை பரிசோதிக்காமல் பெண்கள் கருத்தடை மாத்திரைகளை சாப்பிடுவது உடலில் வேறு வகையான கோளாறுகளை உண்டாக்கும், சில பெண்கள் வீட்டிலோ உறவினர் வீட்டிலோ ஏதேனும் சுப காரியங்களில் அல்லது பண்டிகை நாட்களில் மாதவிடாய் வராமல் இருப்பதற்கு சில மாத்திரைகளை சாப்பிட்டு நாள் தள்ளி மாதவிடாய் வர செய்கின்றனர், இத்தகைய செயலால் மூளையில் கட்டி உண்டாக்குவதாகவும் கர்பப்பை மற்றும் இதய கோளாறுகளை உண்டாக்கும் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இரண்டு மாத அல்லது மூன்று மாத கருவை கலைக்க மருந்து கடையிலிருந்து வாங்கி சாப்பிடும் மாத்திரைகள் கருவை கலைக்காமல் மூளை வளர்ச்சி குறைவான குழந்தை, கைகால் ஊனமுற்ற குழந்தை என்று அந்த மாத்திரையின் வீரியம் கருவை முழுதும் அழிக்க இயலாமல் கருவிலிருக்கும் குழந்தையின் உடலுறுப்பை பாதிப்படையச் செய்து குறை குழந்தைகளை பெறுவதற்கு வழிவகுக்கும். கரு உருவாகாமல் இருப்பதற்கு தகுந்த மருத்துவ ஆலோசனைகளை மருத்துவரிடம் பெற்று பின்னர் மருத்துவரால் பரிந்துரை செய்யப்படும் மாத்திரைகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

கரு உருவாகும் தருணத்தில் தாயின் உடல் நலத்தில் ஏற்ப்படும் கோளாறுகள் எதுவாக இருந்தாலும் மருத்துவ ஆலோசனையின்படி மட்டுமே மாத்திரை மருந்துகள் சாப்பிடுவதால் கருவிலிருக்கும் குழந்தையின் மூளை மற்றும் உடல் உறுப்புகள் பாதிக்கப்படாமல் காக்க முடியும். குழந்தைகள் உடலுக்கு சுகவீனம் ஏற்ப்படுகின்ற போது குழந்தைகளுக்கான மருத்துவரிடம் குழந்தைகளை கூட்டிச்சென்று வைத்தியம் பார்ப்பது அவசியம், குழந்தைகளின் மருந்து மாத்திரைகளை மற்றவர்களின் மாத்திரை மருந்துகளோடு சேர்த்து வைக்காமல் வேறு இடத்தில் வைக்க வேண்டும், மருந்தும் மாத்திரைகள் மற்றும் திரவ பொருட்கள் தீக்குச்சி போன்றவற்றை சிறுவர்களின் கைக்கு எட்டாத இடத்தில் மறைத்து பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

தாழ்வான சுவற்றிலிருக்கும் உபயோகிக்காத மின்சார ப்ளக் துவாரங்களை அடைத்து வைக்க வேண்டும். வீட்டிலிருக்கும் குழாய்களில் தண்ணீர் சொட்டிக்கொண்டிருப்பதை சரிசெய்து தண்ணீர் வீணாவதை நிறுத்த ப்ளம்மரை அழைக்காமல் பியூஸ் போடுவது தண்ணீர் சொட்டும் குழாய்களில் வாஷர் போடுவது போன்ற சிறிய வேலைகளை வீட்டிலிருக்கும் பெண்களே செய்து கொள்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும்.
Title: Re: பெண்களுக்கு சில டிப்ஸ்
Post by: RemO on November 23, 2011, 09:29:16 PM
நல்ல பதிவு