FTC Forum
Special Category => இன்றைய ராசிபலன் => Topic started by: Maran on January 16, 2014, 01:58:50 PM
-
இன்றைய ராசி பலன்கள் - 16/01/2014 (Jan 16th)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fastrology.webdunia.com%2Fimg%2Fcm%2Fthemes%2Fastrology%2Fsmall_sign%2F1.png&hash=781739c6c1fd247c33994b1a719ff1480b8f3df0) மேஷம் :
இன்றைய தினம் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். உடல் நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். பிரபலங்களைச் சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மகிழ்ச்சியுண்டு. அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fastrology.webdunia.com%2Fimg%2Fcm%2Fthemes%2Fastrology%2Fsmall_sign%2F2.png&hash=b1a987109d9637e1dee844c07dc2c7ccb89bebe9)ரிஷபம் :
இரண்டு மூன்று நாட்களாக தடைபட்டுவந்த காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். சொந்தம்-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fastrology.webdunia.com%2Fimg%2Fcm%2Fthemes%2Fastrology%2Fsmall_sign%2F3.png&hash=2a49cd7f180477f9d67f503a6958dd26ce8d623d)மிதுனம் :
வீண்செலவுகளை தவிர்ப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்பவருமானத்தை உயர்த்த ஆலோசனை செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். முன் கோபம் குறையும். தந்தையின் உடல் நிலை சீராகும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fastrology.webdunia.com%2Fimg%2Fcm%2Fthemes%2Fastrology%2Fsmall_sign%2F4.png&hash=16150ec56864ec6722e8ee76893356b19f33c532)கடகம் :
இன்றையதினம் ராசிக்குள் சந்திரன் செல்வதால் பதறாமல் பக்குவமாக செயல்படப்பாருங்கள். சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சனைகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fastrology.webdunia.com%2Fimg%2Fcm%2Fthemes%2Fastrology%2Fsmall_sign%2F5.png&hash=48a6f167e17773d0316e7f9009bce4fcfc3feae7)சிம்மம் :
திட்டமிட்ட காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fastrology.webdunia.com%2Fimg%2Fcm%2Fthemes%2Fastrology%2Fsmall_sign%2F6.png&hash=18c1ff753488c1c75f9a5e5f17eafac1676904a5)கன்னி :
இன்றைய தினம் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும். சகோதரவகையில் மகிழ்ச்சி தங்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fastrology.webdunia.com%2Fimg%2Fcm%2Fthemes%2Fastrology%2Fsmall_sign%2F7.png&hash=6a46e0e82b97660ac54318853dd2e515ad8ac45e)துலாம் :
எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. வெளிவட்டாத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fastrology.webdunia.com%2Fimg%2Fcm%2Fthemes%2Fastrology%2Fsmall_sign%2F8.png&hash=34e4dba5f7627bb4c357cb9cf254a789aa33ee22)விருச்சிகம் :
திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வேற்று மதத்தினரால் நன்மைக் கிட்டும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகும். தாயாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fastrology.webdunia.com%2Fimg%2Fcm%2Fthemes%2Fastrology%2Fsmall_sign%2F9.png&hash=93f2ca2aa37b9570290fdb1e5e2c9e4f30d222b4)தனுசு :
சந்திராஷ்டமம் தொடங்குவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fastrology.webdunia.com%2Fimg%2Fcm%2Fthemes%2Fastrology%2Fsmall_sign%2F10.png&hash=c7d2cfc6f53643d7a41d3ff1594330fc25118b70)மகரம் :
சவால்கள், ஏமாற்றங்களைத் தாண்டி வெற்றிஅடைவீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். பழைய கடனையை பைசல் செய்யும் அளவிற்கு பணவரவு உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வீண் டென்ஷன், அலைச்சல் நீங்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fastrology.webdunia.com%2Fimg%2Fcm%2Fthemes%2Fastrology%2Fsmall_sign%2F11.png&hash=349803e80d920e5ea7f56792cd3dd5125d52b95f)கும்பம் :
வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினரு டன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைசுமை குறையும். உடன்பிறந்தவர்களின் அதரவு கிட்டும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் குறையும். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். நட்பு வட்டாரம் விரியும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fastrology.webdunia.com%2Fimg%2Fcm%2Fthemes%2Fastrology%2Fsmall_sign%2F12.png&hash=1997f0049cca80eb03bc16efdc67e56dbd7579b0)மீனம் :
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லை கள் அகலும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்களின் சந்திப்பு நிகழும். எதிர்காலத்திற் கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்