நெஞ்சு எலும்பு சாம்பார்!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-54e0yJ2h6jY%2FUtTzGzCWOZI%2FAAAAAAAAOG8%2FZxSxOc7__yo%2Fs320%2Fp129.jpg&hash=fc52e7b089075e89713b156c441300792698d737)
தேவையானவை:
ஆட்டு நெஞ்சு எலும்பு (ஆடு) - 200 கிராம், நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப், பூண்டு - 6 பல், ஆச்சி மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், ஆச்சி சாம்பார் பொடி - 2 டீஸ் பூன், துவரம்பருப்பு - 100 கிராம், பச்சை மிள காய் - 6, கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
நெஞ்சு எலும்பை வேக வைத் துக் கொள்ளவும். பருப்பை தண்ணீர் விட்டு வேக வைத்துக் கடைந்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டு, ஆச்சி சாம்பார் பொடி, ஆச்சி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, வெந்த எலும்பையும் போட்டு கொதிக்க வைத்து இறக்கவும். கடுகு, கறிவேப்பிலையை எண்ணெயில் தாளித்து சேர்க்கவும். இது இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். சூடான சாத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.
குறிப்பு:
தேவையெனில், கொதிக்கும்போது சிறிதளவு புளிக்கரைசலை சேர்க்கலாம்.