FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on January 13, 2014, 04:19:33 PM

Title: என் வரிகளில் "ஊரு சனம் தூங்கிருச்சு ஊதகாத்தும் "
Post by: aasaiajiith on January 13, 2014, 04:19:33 PM

 
 
தூக்கமென்னை நேசிக்கல
நானுந்தூக்கத்தை யாசிக்கல
ராத்திரியில் உன்னை யன்றி
வேற எதையும் யோசிக்கல

தூக்கமென்னை நேசிக்கல
நானுந்தூக்கத்தை யாசிக்கல
ராத்திரியில் உன்னை யன்றி
வேற எதையும் யோசிக்கல

மொழி என் தாய்மொழியை நானும் மறந்துவிட்டேன் மாமன் உந்தன் கவியாலே

வழியை என் வழியை நானும் மறந்துவிட்டேன்
மாமன் உந்தன் வரியாலே ,
காதல் கொஞ்சும் மொழியாலே

உன்னை எண்ணித்தானே உயிர்வாழ்கின்றேனே
பாவம் பொண்ணு நானே ..
என் மாமனே ,என் மாமனே ...

மடியினிலே சாஞ்சிக்கவும் , மார்பில் உன் முகம் புதைசுக்கவும்
கொண்ட ஆசை கூடிடனும்
உன் மடியில் கண்ணை மூடிடனும் ....

மாமன் எழுதிவைக்கும் அழகு கவிதையில
வார்த்தையாக மாட்டேனா
நாளும் எழுதி தள்ளும் ஆசைக் கவிதைகளா
நானுமாகமாட்டேனா,மாமனை மயக்க மாட்டேனா ..

மடியினிலே சாஞ்சிக்கவும் , மார்பில் உன் முகம் புதைசுக்கவும்
கொண்ட ஆசை கூடிடனும்
உன் மடியில் கண்ணை மூடிடனும் ....