FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on January 12, 2014, 10:46:25 AM

Title: ~ இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... ! ~
Post by: MysteRy on January 12, 2014, 10:46:25 AM
இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... !

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-XaZjZzywDMc%2FUd00_kxM0_I%2FAAAAAAAACBc%2FcXt-HpeshKU%2Fs1600%2F0%2BSave%2Bheart.jpg&hash=338a765c54ead67950122fd3e7237b011114b401)

இதயம் சம்பந்தபட்ட நோய்கள் வெகுவேகமாக வளர்ந்து வருவது இன்றைய மனித சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலே...
இதய நோய்கள் பெருகியதன் பின்னணியில் மாறிவந்த மனிதசமூக உணவு பழக்க வழக்கங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அந்தக்காலத்தில் எல்லாம் உணவே மருந்து எனுமளவுக்கு நமது முன்னோர்களின் உணவுமுறை இருந்தது. ஆனால் இப்போது பீஸ்சா, பர்கர், பெப்சி, கோக், பாக்கெட் மசாலாக்கள் என்று மாறிவிட்ட உணவுமுறைகளால் நமது ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பின்னடைவுகள் ஏராளம். பழைய உணவுமுறைகளுக்கு மீண்டும் மாறமுடியாது என்றாலும் அட்லீஸ்ட் நமது இன்றைய உணவுகளில் எதையெல்லாம் சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை தெரிந்துகொண்டு உண்ணலாம்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-RocUr1TXi-4%2FUd-ChL5gm4I%2FAAAAAAAACE0%2Ffdrn5BX9l4g%2Fs1600%2F00.jpg&hash=6495828c9be0519a4b08f16c54e9d11214838803)

இதய நோய்களிலிருந்து நம்மை காத்துக்கொள்ள இயற்கை நமக்கு எத்தனையோ உணவுகளை வழங்கியிருக்கிறது. அவை என்னென்ன என்று தெரிந்து கொள்ளும் முன், இதய நோயிலிருந்து நம்மை பாதுகாக்கும் ஹார்மோன்கள், அமிலங்கள், புரதங்கள், விட்டமின்கள் என்னென்ன என்பதையும், அவைகளின் பலன்கள் என்னென்ன என்பதையும் முதலில் தெரிந்து கொள்ளலாம்...
(முதலில் இதைப்பற்றி தெரிந்து கொள்வது, பிறகு எந்தெந்த உணவுகளில் இதில் என்னென்ன இருக்கிறது என்பதை அறியும்போது அவற்றின் மருத்துவ பலன்களையும் நாம் அறிந்து கொள்ள உதவும்)
Phytoestrogens – பைட்டோஸ்ட்ரோஜென்ஸ் :- ஆய்வுகளின்படி இது இரத்தம் உறைதல், ஸ்ட்ரோக் மற்றும் சீரற்ற இதயத்துடிப்பு போன்ற நோய்களுக்கான சாத்தியத்தை குறைக்கிறது. அதுமட்டுமில்லாமல் இது LDL எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் மொத்த கொலஸ்ட்ரால் ஆகியவற்றின் அளவைக்குறைக்கிறது. இரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.
Phytosterols – பைட்டோஸ்டிரால்ஸ் :- ஒருவகை கெமிக்கல் ரிசெம்பிள் கொலஸ்ட்ராலான இது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். பெரும்பாலான பருப்பு மற்றும் விதைகளில் இந்ந கொழுப்புச்சத்து நிறைந்திருக்கும்.
Carotenoids – கரோட்டினாய்ட்ஸ் :- இது பெரும்பாலான வண்ண பழங்கள் மற்றும் காய்கறிகளில் நிறைந்திருக்கும். இதயத்தைப்பாதுகாக்கும் முக்கிய ஆண்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் இது.
Polyphenols – பாலிஃபினால்ஸ் :- ஆண்ட்டி ஆக்ஸிடன்ட்டான இது இரத்த அணுக்களை பாதுகாப்பதோடு நில்லாமல்,  உயர் இரத்த அழுத்தத்தையும் LDL எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது. இதில் Flavonoid மற்றும் Non-Flavonoid என்று இருவகைகள் உண்டு.
Omega-3 Fatty acids – ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ் :- இது நல்ல குண்டான மீன்கள் மற்றும் வால்நட்ஸ் பருப்புகள் போன்றவற்றில் நிறைந்திருக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு, இரத்த உறைதல் வாய்ப்பை குறைத்து ஹார்ட் அட்டாக் வராமல் பாதுகாக்கிறது. இது இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு HDL எனும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.
B-Complex Vitamins – பி காம்ப்ளெக்ஸ் விட்டமின்ஸ் :- விட்டமின் B-12 மற்றும் B-6 ஆகியவை இரத்த உறைதலை (இரத்தக்கட்டிகளை) தடுக்கிறது. நியாஸின் எனப்படும் விட்டமின் B-3 HDL எனும் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
Vitamins C & E – விட்டமின்ஸ் சி & ஈ :- மெக்னீஷியம், பொட்டாஷியம் மற்றும் கால்சியம் ஆகியவை இரத்த அழுத்தத்தை குறைக்கின்றன. நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகள் கொலஸ்ட்ராலின் அளவைக்குறைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன.
சரி... இப்போது இதயத்தைக்காக்கும் இருபத்தைந்து உணவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்...
Title: Re: ~ இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... ! ~
Post by: MysteRy on January 12, 2014, 10:48:34 AM
1)   Salmon போன்ற மீன் வகைகள்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-PoCU08VekXE%2FUd01J5ROHeI%2FAAAAAAAACBk%2FxG7btjU3M54%2Fs1600%2F1%2Bsalmon%2Bfish.jpg&hash=a78a2ea2524e697078a087ffd5e5d073e3d3d494)

இதிலிருப்பது- ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ்.
Title: Re: ~ இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... ! ~
Post by: MysteRy on January 12, 2014, 10:49:37 AM
2)   Flaxseed (Ground)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-iySZJG6mbuY%2FUd01XAHCrlI%2FAAAAAAAACBs%2FDiLUg2Ozgpc%2Fs1600%2F2%2BFlaxseed.jpg&hash=e15d2499cea4deb46571662d35af14f14fa42354)

இதிலிருப்பது- ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ், பைட்டோஸ்ட்ரோஜென்ஸ், ஃபைபர்ஸ்.
Title: Re: ~ இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... ! ~
Post by: MysteRy on January 12, 2014, 10:50:46 AM
3)   ஓட்ஸ் மீல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-YR4RDZU-XCM%2FUd01fA7jOhI%2FAAAAAAAACB0%2FRs-jdJsTDz4%2Fs1600%2F3%2Boatmeal.jpg&hash=f9c72bd0c23a8d40aeb15ca7f77ba84b0d7f7086)

இதிலிருப்பது- ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ், மெக்னீஷியம், பொட்டாஷியம், நியாஸின், கரையக்கூடிய ஃபைபர்ஸ்.
Title: Re: ~ இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... ! ~
Post by: MysteRy on January 12, 2014, 10:51:46 AM
4)   Black பீன்ஸ்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-9ShVDlU4O0k%2FUd01mlDwdbI%2FAAAAAAAACB8%2FV_8NvMoGWkU%2Fs1600%2F4%2BBlack%2Bbeans.jpg&hash=4c11f91235f9f1041a8d60ef3d056a2302ad9dc6)

இதிலிருப்பது- பி காம்ப்ளெக்ஸ் விட்டமின்ஸ், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ், நியாஸின், கால்சியம், மெக்னீஷியம், கரையக்கூடிய ஃபைபர்ஸ்.
Title: Re: ~ இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... ! ~
Post by: MysteRy on January 12, 2014, 10:53:04 AM
5)   Almonds (பாதாம் பருப்பு)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-efZqzZ4nHyg%2FUd01uUqqaZI%2FAAAAAAAACCE%2Fcue0C0hdV_g%2Fs1600%2F5%2BAlmonds.jpg&hash=f59cdc6dbfeb12545d8568f5a2c4ca9f83e912bd)

இதிலிருப்பது- ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ், மெக்னீஷியம்,  ஃபைபர்ஸ், பைட்டோஸ்டிரால்ஸ் மற்றும் இதயத்திற்கு நலமளிக்கும் பாலி மற்றும் மோனோ அன் ஷேச்சுரேட்டடு Fats.
Title: Re: ~ இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... ! ~
Post by: MysteRy on January 12, 2014, 10:54:51 AM
6)   வால்நட்ஸ்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-RkTWnxdPS-o%2FUd012wwv6qI%2FAAAAAAAACCM%2FjBPa8pj6xk4%2Fs1600%2F6%2BWalnuts.jpg&hash=1d1085ecbcd856fb491c84941b599311a594ef1f)

இதிலிருப்பது- ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ், மெக்னீஷியம்,  ஃபைபர்ஸ், பைட்டோஸ்டிரால்ஸ் மற்றும் இதயத்திற்கு நலமளிக்கும் பாலி மற்றும் மோனோ அன் ஷேச்சுரேட்டடு Fats.
Title: Re: ~ இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... ! ~
Post by: MysteRy on January 12, 2014, 10:55:58 AM
7)   ரெட் வொய்ன் (Red Wine)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-kUovNOwbk10%2FUd019vmIfcI%2FAAAAAAAACCU%2FzqBoVVzxOuE%2Fs1600%2F7%2BRed%2Bwine.jpg&hash=aeddabb20e1dd7df35ed931bd1fc1d6b93885c1e)

இதிலிருப்பது- கேட்டசின்ஸ் மற்றும் Flavonoid பாலிஃபினால்ஸ். இது உடம்பிலிருக்கும் நல்ல HDL கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது.
Title: Re: ~ இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... ! ~
Post by: MysteRy on January 12, 2014, 10:57:00 AM
8 )   Tuna

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-byzbILe4Vlo%2FUd02D2hht4I%2FAAAAAAAACCc%2FwBqPOS8Pa1E%2Fs1600%2F8%2BTuna.jpg&hash=7dc1f1a20edc0e5ccfc1e482ffc80145c9941bbc)

இதிலிருப்பது- ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ், நியாஸின்.
Title: Re: ~ இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... ! ~
Post by: MysteRy on January 12, 2014, 10:58:36 AM
9)   பன்னீர்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-d_59mJGkkb0%2FUd02LkEl2iI%2FAAAAAAAACCk%2FT8BX49i_07A%2Fs1600%2F9%2BTofu.jpg&hash=29fa22766881b7c39d3828772a2763b8dd098818)

இதிலிருப்பது- நியாஸின், கால்சியம், மெக்னீஷியம், பொட்டாசியம்.
Title: Re: ~ இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... ! ~
Post by: MysteRy on January 12, 2014, 11:02:45 AM
10) Brown Rice

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-aKHTAwk6TVs%2FUd02R9RuhLI%2FAAAAAAAACCs%2FfCTKpqkaXEI%2Fs1600%2F10%2BBrown-rice.jpg&hash=1714943114c2e3608f8a0c33029e767d7c0040ab)

இதிலிருப்பது- B-காம்ப்ளெக்ஸ் விட்டமின்ஸ், ஃபைபர், நியாஸின், மெக்னீஷியம்.
Title: Re: ~ இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... ! ~
Post by: MysteRy on January 12, 2014, 11:03:52 AM
11) சோயா மில்க்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-uVgegUXSKOw%2FUd02YzLC8HI%2FAAAAAAAACC0%2FYjWqkLgk-GI%2Fs1600%2F11%2Bsoy-milk.jpg&hash=e89703562bc96cf0f84937094d47ea76f2844873)

இதிலிருப்பது- B-காம்ப்ளெக்ஸ் விட்டமின்ஸ், நியாஸின், கால்சியம், மெக்னீஷியம், பொட்டாசியம், Flavonoid பாலிஃபினால்ஸ், பைட்டோஸ்ட்ரோஜென்ஸ்.
Title: Re: ~ இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... ! ~
Post by: MysteRy on January 12, 2014, 11:04:57 AM
12) புளூ பெர்ரீஸ்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-cd1QXSIAgiY%2FUd02gPHUoAI%2FAAAAAAAACC8%2FdR020g_dXpI%2Fs1600%2F12%2BBerries.jpg&hash=e433317aee5bf4d1de35eed56e99c6d0e57ee4b6)

இதிலிருப்பது- பீட்டா கரோட்டின், கரோட்டினாய்ட்ஸ், Flavonoid பாலிஃபினால்ஸ், கால்சியம், மெக்னீஷியம், பொட்டாசியம், ஃபைபர், விட்டமின்-சி.
Title: Re: ~ இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... ! ~
Post by: MysteRy on January 12, 2014, 11:06:08 AM
13) கேரட்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-UiQEpY27ruY%2FUd029Zel0DI%2FAAAAAAAACDE%2FmYuXuPgVR3E%2Fs1600%2F13%2BCarrots.jpg&hash=074b76da5dad1d50c3e7996112893cde5713a436)

இதிலிருப்பது- ஆல்ஃபா கரோட்டின்(கரோட்டினாய்ட்ஸ்), ஃபைபர்.
Title: Re: ~ இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... ! ~
Post by: MysteRy on January 12, 2014, 11:09:15 AM
14) ஸ்பினாச்(கீரையின் ஒரு வகை)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-QCCdeAEvhgw%2FUd03EnRC6eI%2FAAAAAAAACDM%2FFrVNtVwtPnY%2Fs1600%2F14%2BSpinach.jpg&hash=ea0242afdd25c693e266deaa75bdf074bf7d6f11)

இதிலிருப்பது- பீட்டா கரோட்டின்(கரோட்டினாய்ட்ஸ்), கால்சியம், பொட்டாசியம், ஃபைபர், விட்டமின்-C & E.
Title: Re: ~ இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... ! ~
Post by: MysteRy on January 12, 2014, 11:10:16 AM
15) Broccoli (பச்சை நிற காலிஃபிளவர் மாதிரி இருக்கும்)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-mRHFrGpaHWg%2FUd03MFzj5_I%2FAAAAAAAACDU%2F1ah_c3Joc3w%2Fs1600%2F15%2BBroccoli.jpg&hash=d73d4112bb6a9cf3dc96c8d1828b4b052059c1f3)

இதிலிருப்பது- பீட்டா கரோட்டின்(கரோட்டினாய்ட்ஸ்), கால்சியம், பொட்டாசியம், ஃபைபர், விட்டமின்-C & E.
Title: Re: ~ இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... ! ~
Post by: MysteRy on January 12, 2014, 11:11:27 AM
16) Sweet Potato (சீனிக்கிழங்கு)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-BDMJrZpkxMk%2FUd03U21NSeI%2FAAAAAAAACDc%2F4h7mX9mFUVQ%2Fs1600%2F16%2BSweet-potato.jpg&hash=34c70889668b3e42f12212925909badf4539911f)

இதிலிருப்பது- பீட்டா கரோட்டின்(கரோட்டினாய்ட்ஸ்), கால்சியம், பொட்டாசியம், ஃபைபர், விட்டமின்-C & E.
Title: Re: ~ இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... ! ~
Post by: MysteRy on January 12, 2014, 11:12:21 AM
17) சிகப்பு குடை மிளகாய்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-p5R7J56DAJU%2FUd03e3oPnNI%2FAAAAAAAACDk%2Fz6J40O9bG7Y%2Fs1600%2F17%2BRed-bell-pepper.jpg&hash=f6935c3850f37986f122d505db03c41a5bd995a9)

இதிலிருப்பது- பீட்டா கரோட்டின்(கரோட்டினாய்ட்ஸ்), B-காம்ப்ளெக்ஸ் விட்டமின்ஸ், பொட்டாசியம், ஃபைபர்.
Title: Re: ~ இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... ! ~
Post by: MysteRy on January 12, 2014, 11:13:23 AM
18) Asparagus (வெங்காய, முள்ளங்கித்தழை போன்றவை)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-sfMTIF6Hzxg%2FUd03ncnmQgI%2FAAAAAAAACDs%2FUdc27D9VN5A%2Fs1600%2F18%2BAsparagus.jpg&hash=a87f58f40dad839fee6abd79c6a48de6b32766f6)

இதிலிருப்பது- பீட்டா கரோட்டின்(கரோட்டினாய்ட்ஸ்), B-காம்ப்ளெக்ஸ் விட்டமின்ஸ், ஃபைபர்.
Title: Re: ~ இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... ! ~
Post by: MysteRy on January 12, 2014, 11:14:19 AM
19) ஆரஞ்சுப்பழம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-6s9csaHCy5I%2FUd03uIX0L-I%2FAAAAAAAACD0%2Fi50iXjFksHA%2Fs1600%2F19%2BOranges.jpg&hash=2ab1cbd524dfca4cb8364b29750b8c150c88991d)

இதிலிருப்பது- ஆல்ஃபா மற்றும் பீட்டா கரோட்டின், கரோட்டினாய்ட்ஸ், விட்டமின்-சி, Flavonoid பாலிஃபினால்ஸ், பொட்டாசியம், ஃபைபர்.
Title: Re: ~ இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... ! ~
Post by: MysteRy on January 12, 2014, 11:15:18 AM
20) தக்காளிப்பழம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-QzZCgjJYkCM%2FUd030qllDkI%2FAAAAAAAACD8%2Fptt08O3oLWM%2Fs1600%2F20%2BTomatoes.jpg&hash=1472356e08c4d810cea379b6fe42213498b5fd68)

இதிலிருப்பது- ஆல்ஃபா மற்றும் பீட்டா கரோட்டின், கரோட்டினாய்ட்ஸ், விட்டமின்-சி, பொட்டாசியம், ஃபைபர்.
Title: Re: ~ இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... ! ~
Post by: MysteRy on January 12, 2014, 11:16:21 AM
21) Acorn Squash (கல்யாண பூசணிக்காய்)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-QEthu47zYIk%2FUd036xiTLRI%2FAAAAAAAACEE%2FyF2JIB4hUi0%2Fs1600%2F21%2BAcorn-squash.jpg&hash=884463314f88154582f12449daaeb558524c3ab5)

இதிலிருப்பது- பீட்டா கரோட்டின், கரோட்டினாய்ட்ஸ், B-காம்ப்ளெக்ஸ் விட்டமின்ஸ், விட்டமின்-சி, கால்சியம், மெக்னீஷியம், பொட்டாசியம், ஃபைபர்.
Title: Re: ~ இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... ! ~
Post by: MysteRy on January 12, 2014, 11:17:24 AM
22) கிர்ணிப்பழம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-ssJPsetXFug%2FUd04A_0zB7I%2FAAAAAAAACEM%2FtX69a5D9I_0%2Fs1600%2F22%2BCantaloupe.jpg&hash=df8495def47b3df73bf3f687b0add662f6c6acdf)

இதிலிருப்பது- ஆல்ஃபா மற்றும் பீட்டா கரோட்டின், கரோட்டினாய்ட்ஸ், விட்டமின்-சி, B-காம்ப்ளெக்ஸ் விட்டமின்ஸ், பொட்டாசியம், ஃபைபர்.
Title: Re: ~ இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... ! ~
Post by: MysteRy on January 12, 2014, 11:18:23 AM
23) பப்பாளிப்பழம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-7m9RU_tyBQI%2FUd04Hc51jUI%2FAAAAAAAACEU%2FHUptAG9TZts%2Fs1600%2F23%2BPapaya.jpg&hash=de624c20f93dae341073609902672419cfd1eb1d)

இதிலிருப்பது- பீட்டா கரோட்டின், கரோட்டினாய்ட்ஸ், விட்டமின் - C & E, கால்சியம், மெக்னீஷியம், பொட்டாசியம்.
Title: Re: ~ இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... ! ~
Post by: MysteRy on January 12, 2014, 11:19:36 AM
24) டார்க் சாக்கலேட்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-bm2pp7nVIq8%2FUd04NIUbQRI%2FAAAAAAAACEc%2F3ku4dGwTL84%2Fs1600%2F24%2BDark-chocolate.jpg&hash=1489f0bebc93a249bf2734fade99e17b67033955)

 இதிலிருப்பது- கோக்கோ ஃபினால்ஸ்(Flavonoid பாலிஃபினால்ஸ்).
Title: Re: ~ இதயத்தை பாதுகாக்கும் இருபத்தைந்து உணவுகள்... ! ~
Post by: MysteRy on January 12, 2014, 11:21:02 AM
25) தேநீர் (Tea)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-loc8H512Bmk%2FUd04VJDuFjI%2FAAAAAAAACEk%2F6WdWbRvgLZ4%2Fs1600%2F25%2BTea.jpg&hash=3effe23063e23a092ef22d20f326257b38756b16)

இதிலிருப்பது- கேட்டசின்ஸ், Flavonoid பாலிஃபினால்ஸ்.

ஆகவே மக்களே... நோய் வந்தபின் அவதிப்படுவதைவிட வரும்முன் காப்பது எவ்வளவோ மேல் என்பதை உணர்ந்து நமது இதயத்தைப்பாதுகாக்கும் இது போன்ற உணவு வகைகளை நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வோம்...
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”... என்ஜாய் மக்களே!!!