FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on January 10, 2014, 10:42:49 PM

Title: கொள்ளு சாதம்
Post by: kanmani on January 10, 2014, 10:42:49 PM
என்னென்ன தேவை?

ஊறவைத்த அவல் - 1 கப்,
முளைகட்டிய கொள்ளு - 1/2 கப்,
மசாலா பொடி அல்லது சிவப்பு மிளகாய் ஃபிளேக்ஸ் - 2 டீஸ்பூன்,
பூண்டு - 2 பல்,
சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது? 

ஊறவைத்த அவலுடன் முளைகட்டிய கொள்ளைச் சேர்க்கவும். மசாலா பொடி, உப்பு, சீரகத்  தூள்,  பூண்டு, நல்லெண்ணெய் விட்டு நன்றாகக் கலக்கிப்  பரிமாறவும். தேவையற்ற கொழுப்பை குறைக்கும்.