FTC Forum

Special Category => இன்றைய ராசிபலன் => Topic started by: kanmani on January 09, 2014, 11:46:28 PM

Title: இன்றைய ராசி பலன்கள் - 09/01/2014 (Jan 9th)
Post by: kanmani on January 09, 2014, 11:46:28 PM
இன்றைய ராசி பலன்கள் - 09/01/2014 (Jan 9th)


மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லக் கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். நேர்மறை எண்ணம் தேவைப்படும் நாள்.


ரிஷபம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலை களை முடிப்பீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


மிதுனம்: நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். மதிப்பு கூடும் நாள்.


கடகம்: கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். சாத்வீகமான எண்ணங்கள் வரும். பிள்ளைகளின் தேவை களை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர் தேடி வருவர். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக் கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.


சிம்மம்: கடந்த 2 நாட்களாக குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியா பாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத் யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.


கன்னி: சந்திராஷ்டமம் துவங்கு வதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிடாதீர். உத்யோகத் தில் மறைமுக அவமானங்கள் வந்து நீங்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.


துலாம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதரங்களால் பயனடை வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாகமுடியும். ஆடை, ஆபரணம் சேரும். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத் தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர் கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்களின் கடின உழைப்பால் அதிகாரியின் மனதில் இடம் பிடிப்பீர்கள். அமோகமான நாள்.



தனுசு: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். உங்களின் நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறை வேற்றுவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புதுமை படைக்கும் நாள்.


மகரம்: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்களை முடிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர் கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.


கும்பம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.


மீனம்: கடந்த 2 நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்தி வரும். வெளி வட்டாரத்தில் மதிப்புக் கூடும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனநிம்மதி கிட்டும் நாள்.