வில்வ சூப்:
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamilthoguppu.com%2Fwp-content%2Fuploads%2F2013%2F11%2FVilwa-soup.jpg&hash=e3c0c987c3731add5012874974bb101ff5873db4)
தயாரிக்கத் தேவையான பொருட்கள்:
வில்வ இலை – 1 கப்
(அ) வில்வ பொடி 15 கிராம் – 3 டீஸ்பூன்
தக்காளி – 1
வெங்காயம் – 1
கொத்தமல்லி – சிறிது
இஞ்சி, பூண்டு – சிறிது
மிளகுத்தூள், சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
கம்பு மாவு – 2 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு முதலியவற்றை நறுக்கிக் கொள்ளவும். வில்வ இலையுடன் தண்ணீர் கலந்து வேக வைத்து கொள்ளவும். கம்பு மாவை தண்ணீரில் கரைத்து கலக்கவும். கொதி நிலையில் நறுக்கிய காய்கறிகள், கலந்து கொதித்த பின்பு மசித்து சூடு ஆறும் முன்பு வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.