உலர் திராட்சை
(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash3/1185561_576453215769312_1433140158_n.jpg)
சூரிய ஒளியில் உலர்த்தித் தயாரிக்கப்படும் உலர் திராட்சையை, நெஞ்சில் சளி இருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். பழத்தைப் போலவே இதுவும் மலமிளக்கியாகச் செயல்படும். உடலில் உள்ள கொழுப்பை அகற்றும் பணியை உலர் திராட்சை செய்கிறது. குழந்தைகளுக்கு இதைச் சிற்றுண்டியாகக் கொடுக்கலாம். இதனால் பற்களில் உள்ள கிருமிகள் அழிக்கப்படுகின்றன. மேலும் பற்சிதைவும் தடுக்கப்படும். இதில் அதிகப்படியான இரும்புச் சத்து உள்ளதால், ரத்தசோகை உள்ளவர்கள் சாப்பிட்டுவந்தால் நல்ல நிவாரணம் பெறலாம்.
தேர்வு நேரங்களில் மாணவர்கள், சிறிது உலர் திராட்சைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் சோர்வு, மறதி ஆகியவற்றைத் தவிர்க்கலாம். சுறுசுறுப்பும் கிடைக்கும்.