FTC Forum

Special Category => இன்றைய ராசிபலன் => Topic started by: kanmani on January 05, 2014, 10:42:29 PM

Title: இன்றைய ராசி பலன்கள் - 05/01/2014 (Jan 5th)
Post by: kanmani on January 05, 2014, 10:42:29 PM
இன்றைய ராசி பலன்கள் - 05/01/2014


மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந்த வர்கள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்பு களை ஏற்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.


ரிஷபம்: மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும்.வி.ஐ.பிகளால் ஆதாயமடை வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியா பாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். சாதிக்கும் நாள்.


மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, சலிப்பு யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உற்சாகமான நாள்.


கடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியா மல் குழம்புவீர்கள். சிலர் உங்களை குறை கூறினா லும் அதைப் பெரிதாக்க வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். திட்டமிட்டவை தாமதமாகி முடியும் நாள்.


சிம்மம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகை யில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.


கன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பயணங் களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். தொட்ட காரியம் துலங்கும் நாள்.


துலாம்: வருங்காலத் திட்டத் தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.


விருச்சிகம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். நீண்ட நாட் களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உழைப்பால் உயரும் நாள்.


தனுசு: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்கள் உறுதுணை யாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். நினைத்ததை முடிக்கும் நாள்.


மகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். அழகு, இளமை கூடும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


கும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிபடுவீர் கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப் போது சிக்கித் தவிப்பீர்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்த வர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்பு களையும் ஒப்படைக்க வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.


மீனம்: எளிதில் முடிய வேண்டிய சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர் களால் சங்கடங்கள் வரும். உடல் அசதி, சோர்வு வந்து விலகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். போராடி வெல்லும் நாள்.