வெண்டைக்காய் மசாலா கறி!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F01%2Fzjnimu%2Fimages%2Fp145.jpg&hash=dcd9fed70e6afb51c35ec17936021de33b9b3c5a)
தேவையானவை:
பிஞ்சு வெண்டைக்காய் - கால் கிலோ, சாம்பார் வெங்காயம் - 10, பூண்டு - 10 பல், ஆச்சி தக்காளி சாதப்பொடி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெண்டைக்காய்களை காம்பு நீக்கி, கீறி வைக்கவும். சாம்பார் வெங்காயம், பூண்டு இரண்டையும் அரைக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அரைத்த விழுதை வதக்கவும். இத்துடன் ஆச்சி தக்காளி சாதப் பொடி, உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். கலவை ஆறியதும், அதை கீறி வைத்துள்ள பிஞ்சு வெண்டைக்காய்களில் நிரப்பி வைத்துக் கொள்ளவும்.
அகலமான வாணலியில் அல்லது 'ஃப்ரையிங் பேன்’-ல் கொஞ்சம் தாரளமாக எண்ணெய் விட்டு, ஸ்டஃப் செய்த பிஞ்சு வெண்டைக்காய்களை பரப்பி, அதிகம் கிளறாமல் அப்படியே ரோஸ்ட் செய்து எடுக்கவும். இதனை சப்பாத்தியுடன் பரிமாறலாம். சாதத்துக்கு தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.
இதே முறையைப் பயன்படுத்தி பிஞ்சு கத்தரிக்காய், கோவைக்காயிலும் மசாலா கறி செய்யலாம்.