அம்மா ரெசிபி! சுண்டைக்காய் துவையல் !
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2014%2F01%2Fmgqwyz%2Fimages%2Fp37.jpg&hash=e51e4087c243d5f8f8ca6feeb3726e66547579d2)
''என் வீட்டில் மூலிகைச் சமையலுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம். எப்போதாவதுதான் ஹோட்டல் பக்கம் போவோம். வீட்டுச் சமையலே ஆரோக்கியம்தான். அதிலும், மூலிகையில் சமைக்கும் உணவு, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவும்'' என்கிறார் மதுரை வாசகி பொன்னழகி தேனப்பன், சுண்டைக்காய்த் துவையல் செய்யும் முறையை இங்கே விவரிக்கிறார்...
தேவையானவை:
சுண்டைக்காய்ப் பிஞ்சு - ஒரு கையளவு, உப்பு, புளி - சிறிதளவு, சின்ன வெங்காயம் - 6, கடலைப்பருப்பு - 5 ஸ்பூன், தேங்காய்த் துருவல் - 4 ஸ்பூன். தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை.
தேவையானவை:
சுண்டைக்காய்ப் பிஞ்சு - ஒரு கையளவு, உப்பு, புளி - சிறிதளவு, சின்ன வெங்காயம் - 6, கடலைப்பருப்பு - 5 ஸ்பூன், தேங்காய்த் துருவல் - 4 ஸ்பூன். தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை.
செய்முறை:
சுண்டைக்காயைக் கழுவிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வதக்கி ஆற வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்கள் போட்டுத் தாளித்து, சின்ன வெங்காயம், உப்பு, புளி, கடலைப்பருப்பு, தேங்காய்த் துருவல் அனைத்தையும் சேர்த்து வதக்கவும். இதனுடன் வதக்கிய சுண்டைக்காயைச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
இட்லி, தோசையுடன் சேர்த்துச் சாப்பிட நன்றாக இருக்கும்.
டயட்டீஷியன் சோஃபியா:
நல்ல செரிமானத்தைத் தரும். உடல் சோர்வை நீக்கும். வயிற்றுப்பூச்சிகளை விரட்டும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதன் மூலம், சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கலாம். நெஞ்சுக் கபத்தை நீக்கும். இதில் கால்சியம், புரதம், இரும்புச் சத்து அதிகம் இருப்பதால், ரத்தசோகை உள்ளவர்கள் சாப்பிடலாம்.