FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: kanmani on January 02, 2014, 09:06:55 PM

Title: சூரிய குடும்பத்துக்கு வெளியே புதிய 70 மடங்கு பெரிய நிலவு கண்டுபிடிப்பு
Post by: kanmani on January 02, 2014, 09:06:55 PM
சூரிய குடும்பத்துக்கு வெளியே ஒரு மிகப் பெரிய நிலவு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை பூமியில் இருந்து 1800 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. கிரகத்தின் தோற்றம் வியாழன் மற்றும் நிலவு கிரகங்களை விட 4 மடங்கு பெரிதாகவும், அதை தொடர்ந்து வரும் பூமியின் நிலவை விட 70 மடங்கு பெரிதாகவும் காணப்பட்டன.

அதாவது பூமியில் இருந்து நாம் காணும் நிலவை விட பலமடங்கு பெரியதாக இருந்தது. சூரிய மண்டலத்துக்கு வெளியே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பதையும், பால் வீதியில் புதிய நட்சத்திரங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.  இதனையடுத்து சூரிய குடும்பத்துக்கு வெளியே முதன்முதலாக புதிய நிலவு இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துளள்ளனர்.

சூரியனை மையமாக கொண்டு அதை சுற்றிவரும் கோள்களை, குறிப்பாக, நம் கண்களுக்கு புலப்படும் கோள்களை சூரிய குடும்பம் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். சூரிய குடும்பத்தின் மூன்றாவது கோள்தான் நாம் வாழும் பூமி. இந்த சூரிய குடும்பத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவையும் இணைந்துள்ளன. சூரிய குடும்பத்துக்கு வெளியே சுமார் 850 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் பெரும்பாலானவை வியாழன் போன்றவைதான். இதுபற்றி  தற்போது சூரிய மண்டலத்துக்கு வெளியே சந்திரன் இருப்பதை இண்டியானாவில் உள்ள நோட்ரே டேம் பல்கலைக் கழக விஞ்ஞானி டேவிட் பென்னட் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இது நிலவுதான் என்பது உறுதிசெய்யப்படும் பட்சத்தில், சூரிய குடும்பத்துக்கு வெளியே கண்டறியப்பட்ட முதல் நிலவு இதுவாகத்தான் இருக்கும். இந்த நிலவில் உயிரினங்கள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.