FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: kanmani on January 02, 2014, 09:01:48 PM
-
என்னென்ன தேவை?
சின்ன வெங்காயம் - 25 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 3 நீளமாக நறுக்கியது
வெள்ளைப்பூண்டு - 10 பொடியாக நறுக்கியது
தக்காளி - 1.
முட்டை- 4
அரைக்க:
தேங்காய் - அரை மூடி
புளி - கோலிகுண்டு அளவு
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 1
சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்.
(அனைத்தையும் நைசாக அரைக்கவும்)
தாளிக்க:
நல்லெண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். கறிவேப்பிலை சேர்த்து, பெருங்காயத்தூள் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மிளகாய் சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும், நான்காக நறுக்கிய தக்காளியை வதக்கவும். நைசாக அரைத்து வைத்திருக்கும் கலவையைச் சேர்க்கவும். நன்றாக வதங்கியதும் மஞ்சள் பொடி, தனியா தூள் சேர்க்கவும். நீர்க்க தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து, எண்ணெய் தெளிந்து வந்ததும் குழம்பில் முட்டை சேர்க்கலாம். ஸ்டவ்வை மிதமாக்கி, 4 முட்டையை அடித்து அப்படியே ஊற்றி 3 நிமிடங்கள் கழித்து திருப்பிப்போட்டு, வெப்பப் படுத்தி, முட்டை வெந்ததும் இறக்கி குழம்பில் சேர்த்தால் முட்டைக் குழம்பு தயார்.