வாழைப்பூ பஜ்ஜி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2014%2F01%2Fmgqwyz%2Fimages%2Fp69z.jpg&hash=3e5934a4fa4802177512378bb7842197f7d587bb)
தேவையானவை:
ஆய்ந்த வாழைப்பூ - ஒரு கப், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு. அரைக்க: கடலைப்பருப்பு - கால் கப், அரிசி - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 4 பல், காய்ந்த மிளகாய் - 4, உப்பு - ருசிக்கேற்ப.
செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களில் பருப்பையும் அரிசியையும் ஊறவைத்து, மற்ற பொருட்களுடன் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, வாழைப்பூவை ஒவ்வொன்றாக எடுத்து, அரைத்த மாவில் தோய்த்து, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
குறிப்பு:
இந்த வாழைப்பூ பஜ்ஜியைப் போட்டுக் குழம்பும் செய்யலாம். சுவையாக இருக்கும்.
பலன்கள்:
வயிற்றுக்குத் தொந்தரவு தராத, கொறிக்கும் உணவு. சிறந்த ஊட்டத்தைக் கொடுக்கும். குடல் பலப்படும்.