வாழைத்தண்டு பச்சடி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2014%2F01%2Fmgqwyz%2Fimages%2Fp69x.jpg&hash=98beb6d20b277b5aad3481ecdc4976c82a9a6e1d)
தேவையானவை:
பிஞ்சு வாழைத்தண்டு - 1, புளிப்பில்லாத தயிர் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு துண்டு, உப்பு - ருசிக்கேற்ப, பெருங்காயம் - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - 4 டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை:
வாழைத்தண்டைப் பொடியாக நறுக்கி, மஞ்சள்தூள் சேர்த்து, கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைக்கவும். பிறகு எடுத்து கரண்டியால் மசிக்கவும். இஞ்சி, பச்சை மிளகாயை அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு, கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி, தயிரில் போடவும். பாதி அளவு கொத்துமல்லி, தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து, வாழைத்தண்டையும் போட்டு நன்றாகக் கிளறிவிடவும். மீதியிருக்கும் கொத்துமல்லியைத் தூவிப் பரிமாறவும்.
பலன்கள்:
வயிறு, குடல் பகுதிகளைச் சீராக்கி, பசியை அதிகரிக்கும். புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். சிறுநீரகச் செயல்பாட்டினை மேம்படுத்துவதன் மூலம், உடலின் நச்சுத்தன்மை வேகமாக வெளியேற உதவிபுரியும்.