வாழைப்பூ முருங்கைக்கீரை துவட்டல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2014%2F01%2Fmgqwyz%2Fimages%2Fp69w.jpg&hash=33f84c2b186bed20897cd5c20f3620e8f5770b1b)
தேவையானவை:
ஆய்ந்த வாழைப்பூ - ஒரு கப், முருங்கைக்கீரை - ஒன்றரை கப், அரை வேக்காடாக வேகவைத்த பாசிப்பருப்பு - கால் கப், சின்ன வெங்காயம் - 6, பச்சைமிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - 1, தேங்காய்த் துருவல் - கால் கப், உப்பு - ருசிக்கேற்ப. தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்.
செய்முறை:
வாழைப்பூவைப் பொடியாக நறுக்கி, மோரில் போடவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, பச்சைமிளகாயைக் கீறிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சைமிளகாயைப் போட்டு வதக்கவும். பிறகு, கீரையைப் போட்டு நன்றாகப் பிரட்டவும். இதனுடன் வாழைப்பூவைப் போட்டு வதக்கி, லேசாகத் தண்ணீர் தெளித்து வேகவிடவும். வெந்ததும் உப்பு சேர்த்து, பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல் போட்டுக் கிளறி இறக்கவும்.
பலன்கள்:
பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் அதிக உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தும். ரத்தசோகையை வேகமாக நீக்கும். வயிறு மற்றும் உள்ளுறுப்புகளில் ஏற்படக்கூடிய உதிரப்போக்கைத் தடுக்கும். ரத்தக்குழாய்களைப் பலப்படுத்தி, மாரடைப்பு வருவதைத் தடுக்கும்.