பனானா டெஸர்ட்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2014%2F01%2Fmgqwyz%2Fimages%2Fp69q.jpg&hash=0a26dc3c25847f545f110108eadc937b85d94fba)
தேவையானவை:
பச்சை வாழைப்பழம் - 2, சர்க்கரை - 150 கிராம், பால் - 2 கப், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, மில்க் மெயிட் - கால் கப், மேரி பிஸ்கெட் - 4, முந்திரி, பாதாம் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், திராட்சை - ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
பாலில் சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து நன்றாக சுண்டக் காய்ச்சவும். சிறிது ஆறியதும், மில்க் மெயிட் சேர்த்துக் கலந்து வைக்கவும். வாழைப்பழத் துண்டுகளை வட்ட வட்டமாக வெட்டி பாலில் சேர்க்கவும். இதை ஒரு டிரேயில் ஊற்றி, மேரி பிஸ்கெட்டை நன்றாகப் பொடித்து மேலே தூவி, பிரிட்ஜில் வைக்கவும். பரிமாறும்போது, முந்திரி, பாதாம் பருப்புகளை துருவி, மேலே தூவவும்.
குறிப்பு:
வாழைப்பழத் துண்டுகளை நறுக்கியவுடன் பாலில் போடவேண்டும். இல்லையென்றால் கருத்துவிடும்.
பலன்கள்:
தசைக்கு வலுவூட்டும். சோர்வினை வேகமாக நீக்கி, உடனடிப் புத்துணர்ச்சி ஏற்படுத்தும். ரத்த அழுத்தத்தை சீர் செய்யும். வயிற்று எரிச்சல் மற்றும் சீரணக் குறைபாடுகளை நீக்கும். தூக்கமின்மைக் குறைபாடு நீங்கும். இதுவும் 'புரோபயாட்டிக்’ செயலாற்றல் நிறைந்த உணவு.