வெஜிடபிள் அல்வா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2014%2F01%2Fmgqwyz%2Fimages%2Fp69p.jpg&hash=2e888e82e6bfdc9dd7d21a12e73cb6c5f9daf0cb)
தேவையானவை:
பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு, சௌசௌ, பட்டாணி - தலா 50 கிராம், சர்க்கரை - 200 கிராம், பால் - ஒரு கப், மில்க்மெயிட் - கால் கப், நெய் - 2 டீஸ்பூன், ஏலத்தூள் - ஒரு சிட்டிகை, முந்திரிப்பருப்பு - 5.
செய்முறை:
எல்லாக் காய்களையும் கழுவி, தோல் சீவி, துண்டுகளாக நறுக்கி, குக்கரில் போட்டு வேகவைத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையோடு, பால், மில்க் மெயிட், சர்க்கரை சேர்த்து, கனமான பாத்திரத்தில் போட்டு, நடுநடுவே சிறிது நெய் விட்டு, நன்றாகக் கிளறவும். சுருண்டு வரும்போது, ஏலத்தூள், நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.
பலன்கள்:
ரத்த அழுத்தம் சீராகும். கருவுற்றிருக்கும்போது, பெண்களுக்கு ஏற்படும் சோகை, ஊட்டச் சத்துக் குறைபாடுகளை நீக்கும்., ஊட்ட உணவு. கருவுற்ற பெண்களுக்கு புத்துணர்ச்சி தரும். ஆண்களுக்கு ஆண்மைக் குறைவை நீக்கும்.