சுண்டைக்காய் நெல்லிக்காய் ஊறுகாய்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2014%2F01%2Fmgqwyz%2Fimages%2Fp69o.jpg&hash=18ce1734c3c0935ed74dc6ef8df6db10164f194f)
தேவையானவை:
சுண்டைக்காய், நெல்லிக்காய்த் துண்டுகள் - தலா கால் கப், பச்சை மிளகாய் - 8, புளி - நெல்லிக்காய் அளவு, உப்பு - ருசிக்கேற்ப, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை. பொடிக்க: வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கடுகு பெருங்காயம் - தலா டீஸ்பூன். தாளிக்க: எண்ணெய் - 5 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன்.
செய்முறை:
சுண்டைக்காய், நெல்லிக்காய், புளி, பச்சை மிளகாய், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக உரலில் போட்டு இடித்து எடுக்கவும். இடிக்க முடியாதவர்கள், மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து எடுக்கவும். வெந்தயம், பெருங்காயம், கடுகு மூன்றையும் வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, இடித்து வைத்திருக்கும் கலவையைப் போட்டு, மஞ்சள்தூள் சேர்த்து சுருளக் கிளறவும். பொடித்து வைத்திருக்கும் பொடியைப் போட்டுக் கிளறி, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.
பலன்கள்:
உணவின் சத்துக்கள் முழுமையாக உடலில் ஏறத் துணைபுரியும். குடல் கிருமிகளை நீக்கி, குடலின் ஆற்றலை அதிகப்படுத்தும். உமிழ்நீர் சுரப்பினை அதிகப்படுத்தி, வாயிலேயே உணவின் பகுதியான செரிமானம் நடப்பதற்கு உதவிபுரியும். புகைபிடிக்கும் எண்ணத்தைக் குறைப்பதற்கு உதவி புரியும்.