சர்க்கரைவள்ளிக் கிழங்கு அல்வா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2014%2F01%2Fmgqwyz%2Fimages%2Fp69n.jpg&hash=43fd98235db34d7f7bd2458f9b6f1a80184db91e)
தேவையானவை:
சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 200 கிராம், சர்க்கரை - 150 கிராம், பால் - ஒரு கப், பால்கோவா - கால் கப், முந்திரி, திராட்சை - தலா 10, நெய் - 5 டீஸ்பூன், ஏலக்காய் - 2 அல்லது பாதாம் எசன்ஸ் - சில துளிகள், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை.
செய்முறை:
சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் சீவி, பொடியாக நறுக்கி, நன்றாகக் கழுவிக்கொள்ளவும். இந்தத் துன்டுகளை குக்கரில் வைத்து 2, 3 விசில் வந்ததும் எடுக்கவும். இது நன்றாக குழைந்துவிடும். வெந்த கிழங்கை எடுத்து மசித்து, அதில் பால், பால்கோவா, சர்க்கரை சேர்த்து, அடி கனமான பாத்திரத்தில் போட்டு, அடுப்பில் வைத்துக் கிளறவும். எல்லாம் சேர்ந்தாற்போல திரண்டு வரும்போது ஒரு டீஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து அல்வாவில் சேர்க்கவும். மீதி நெய்யை அல்வாவில் ஊற்றி, கேசரி பவுடர் சேர்த்து நன்றாகக் கிளறவும். அல்வா சுருண்டு வரும்போது, ஏலக்காய் அல்லது பாதாம் எசன்ஸ் சேர்த்து இறக்கவும்.
பலன்கள்:
நார்ச் சத்து உள்ளதால் மலச்சிக்கலை நீக்கும். எலும்புகளை வலுவாக்கும். உடல் தளர்ச்சி நீங்கும். எதிர்ப்பு ஆற்றல் அதிகப்படும். இருபாலருக்கும் இல்லற வாழ்வு ஈடுபாட்டை அதிகப்படுத்தும்.