கருப்பட்டி ஆப்பம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Fdoctor%2F2014%2F01%2Fmgqwyz%2Fimages%2Fp69k.jpg&hash=0a159ed52be1723d409c528ca6d7c577750db389)
தேவையானவை:
புழுங்கலரிசி, பச்சரிசி - தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு - கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கருப்பட்டி - 200 கிராம், வெல்லம் - 50 கிராம், தேங்காய்த் துருவல் - கால் கப்.
செய்முறை:
அரிசி, பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக ஊறவைத்து, கெட்டியாக அரைத்துக் கரைத்து 8 மணி நேரம் புளிக்கவைக்கவும். கருப்பட்டியையும் வெல்லத்தையும் பொடித்து, சிறிது தண்ணீர்விட்டு அடுப்பில்வைத்துப் பாகு காய்ச்சவும். பாகை இறக்கி வடிகட்டி, சூட்டோடு மாவில் ஊற்றி, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாகக் கலந்து வைக்கவும். ஆப்ப மாவு பதம் வருவதற்கு, தண்ணீர் தேவைப்பட்டால் ஊற்றிக் கரைத்துக்கொள்ளலாம். ஆப்பக் கடாயைக் காயவைத்து, ஆப்பங்களாக ஊற்றி எடுக்கவும். சர்க்கரை சேர்க்காத தேங்காய்ப் பால் சேர்த்துப் பரிமாறலாம்.
பலன்கள்:
சிறந்த ஊட்டச் சத்துள்ள உணவு. எலும்பு மற்றும் தசை பலத்தினை அதிகரிக்கும். மனத் தடுமாற்றத்தை நீக்கி, மன பலத்தைக் கொடுக்கும்.