FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RemO on November 22, 2011, 10:02:31 AM
-
சாதிக்கப்பிறந்தவள் நானுங்க - இங்கு
சாகப்பிறந்தவள் நானில்லைங்க!
புத்தி சொல்லுவது எனக்கு புடிக்காதுங்க
சொந்தப்புத்தி எனக்கு ஏராளமுங்க!
எத்தனையோ ஏமாற்றங்கள்!
எத்தனையோ வேதனைகள்!
ஆயிரம் சித்ரவதைகள் இருந்தாலும்
அத்தனையும் முறியடிப்பேனுங்க
சின்ன சின்ன சுகங்கள் கூட
என் மனசுக்கு வாய்க்கலைங்க...
விருப்பு வெறுப்பு என்ற எதுவுமே
என் வாழ்க்கைக்கு இல்லைங்க...
கடலுக்குள் இருக்கும் உப்பாய்
உறைஞ்சு நிறைஞ்சிருப்பேனுங்க - ஆனால்
ஒரு போதும் காணாமல்
கரைஞ்சு போகமாட்டேனுங்க....
நினைச்சதை நடத்தும் நாள் வரை - என்
நெஞ்சத்து நெருப்பை அணைக்கமாட்டேனுங்க
பாறாங்கல்லான என் வாழ்வை - சிறு
பனித்துளியாய் மாற்றிச்செல்வேனுங்க....
-
புத்தி சொல்லுவது எனக்கு புடிக்காதுங்க
சொந்தப்புத்தி எனக்கு ஏராளமுங்க!
;) ;) ;) ;) ;) ;) ;) its me la
-
apple ama unaku porunthum pola (lol)
oruvelai ne than eluthirukiyo