FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: sasikumarkpm on December 30, 2013, 10:46:59 PM
-
மின்னலின் சிரிப்பென,
மின்மினிப் பூவென,
கண்ணது கயலென,
கருங்குழல் விரியென,
பூங்குழல் மொழியென,
பொலிர்நகை அகமென,
தண்டைகள் கொஞ்சிட
தவழ்ந்திடும் முகிலென,
தண்நிழல் பொழிந்திடும்
நிறைமுக நிலவென,
என்மன தளந்தனில்
நிலவியவள் நீதானே..
-
ஆஹா! என்ன ஒரு காதல் கவிதை!! சூப்பர்..
-
நன்றி மாறன்.. :)
-
அழகிய வரிகள் !!
-
நன்றி நண்பா.. :)