FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on December 27, 2013, 10:04:54 PM

Title: ~ வீட்டுக்குறிப்புக்கள்!! ~
Post by: MysteRy on December 27, 2013, 10:04:54 PM
வீட்டுக்குறிப்புக்கள்!!

உருளைகிழங்கு வாங்கும்போது பச்சையாக இல்லாமல் பா‌ர்‌த்து வா‌ங்கவு‌ம்.

உருளை‌க் ‌கிழ‌ங்கு கெட்டியாகத் தோல் உரிந்திருந்தால் அது ந‌ல்ல உருளைக்கிழங்கு.

வாழைக்காய் சமையல் உணவில் சேரும்பொழுது மிளகு, சீரகம் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் வாயு தெரியாது.

கோதுமை மாவை கரைத்து அதில் ஒரு டம்ளர் மோர் ஊற்றி கரைத்து உடனே தோசை வார்க்கலாம்.

காய்கறிகளை நறுக்கி அதை கழுவும்போது தண்ணீரில் சில வைட்டமின்கள் கரைந்து வீணாகிவிடுகிறது.
கா‌ய்க‌றிகளை நறு‌க்குவத‌ற்கு மு‌ன்பே ந‌ன்கு கழு‌வி ‌விடு‌ங்க‌ள்.

மீனை வாணலியில் போடுவதற்கு முன்பாக வாண‌லி‌யி‌ல் சிறிதளவு மஞ்சள் தூளை தூவி பிறகு வறுத்தால் வாணலியில் ஒட்டிக் கொள்ளாது.

அடி‌பி‌டி‌க்கு‌ம் பா‌த்‌திர‌த்‌தி‌ல் முத‌லி‌ல் எ‌ண்ணெ‌ய் தட‌வி‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் சமை‌த்தா‌ல் அடி‌பிடி‌க்காது.