சோள ரவை கிச்சடி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzrint%2Fimages%2Fp20c.jpg&hash=d9e7aba7a19d875ce29282bbd12e5faa4956ac19)
தேவையானவை:
சோள ரவை - ஒரு டம்ளர், கேரட் - ஒன்று, பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 3, பூண்டு - 10 பல், தக்காளி - ஒன்று, பெரிய வெங்காயம் - 2, பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை - தலா 2, முந்திரிப்பருப்பு - 6, எண்ணெய் - அரை குழிக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி... பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் பூண்டு, முந்திரி, நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி... நறுக்கிய கேரட், பச்சைப் பட்டாணி சேர்த்து மேலும் வதக்கவும். காய்கறி சிறிது வெந்ததும், அதில் ஒன்றேகால் டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து மேலும் வேகவிடுங்கள். காய்கறி நன்கு வெந்ததும், சோள ரவையை சேர்த்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து, வேகவைத்தால்... அற்புதமான சோள ரவை கிச்சடி ரெடி!