ஆரஞ்சு ஃப்ரைடு ரைஸ்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzrint%2Fimages%2Fp54.jpg&hash=746c4a020bf682651f6e1bf4343ef4478943b7b1)
தேவையானவை:
கமலா ஆரஞ்சு ஜூஸ் - கால் கப், ஆரஞ்சு சுளை - 2, பாஸ்மதி அரிசி சாதம் (உதிரியாக வடித்து) - ஒரு கப், வெண்ணெய் அல்லது எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒன்று, பச்சை மிளகாய் - ஒன்று, கேரட் துருவல் - 2 டீஸ்பூன், வேக வைத்த பச்சைப் பட்டாணி - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சாதம், ஆரஞ்சு ஜூஸ், உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெய் அல்லது எண்ணெய் விட்டு, சீரகத்தை சிவக்க வறுத்து, நறுக்கிய பச்சை மிளகாய், பிரிஞ்சி இலை, கேரட் துருவல், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, சாதத்தை போட்டு கிளறி இறக்கவும். ஆரஞ்சு சுளைகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மேலே தூவி அலங்கரிக்கவும். இது, லஞ்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்ப மிகவும் ஏற்றது.