பீட்ரூட் மஸ்கோத்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzrint%2Fimages%2Fp54a.jpg&hash=303a805563233614a304c101507927a4e3e0f283)
தேவையானவை:
பீட்ரூட் - ஒன்று, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் - ஒரு மூடி (அரை கப் முதல் தேங்காய்ப் பால், ஒரு கப் இரண்டாம் தேங்காய்ப் பால் எடுக்கவும்), பாதாம், முந்திரி, பிஸ்தா (சேர்த்து) - 3 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மைதா - 2 டீஸ்பூன்
செய்முறை:
வாணலியில் நெய் ஊற்றி காய வைத்து, பொடியாக நறுக்கிய பீட்ரூட் சேர்த்து வதக்கவும். வதங்கிய பிறகு இரண்டாம் தேங்காய்ப் பால் ஊற்றி வேகவிடவும். நன்றாக வெந்து மசிந்த பிறகு மைதா மாவு சேர்த்துக் கலந்து (அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்ய வேண்டும்), சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
இதனுடன் முதல் தேங்காய்ப் பால் சேர்த்து நன்றாக கெட்டியாகும் வரை கிளறவும். பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரியை மேலே தூவி இறக்கவும்.