FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on December 26, 2013, 06:31:53 PM

Title: சுவாசத்தால் பேசும் வசீகரியே !!
Post by: aasaiajiith on December 26, 2013, 06:31:53 PM
சுவாசத்தால் பேசும் வசீகரியே !!

வார்த்தைக்கு வார்த்தை எனை
வசியம் செய்து என் மனதை
வசீகரித்து வசம் வைத்திருக்கும்
வசீகரி யே !
உனை என்னில் வசியம் செய்தவை
யாதென
வரிசையாய் வரிசை படுத்தவா?


சந்தனத்திற்கும் மணக்கும்
கஸ்தூரிக்கும்
கிட்டா மகத்தான
வராலாற்று கௌரவம் பெற்ற
உன் முத்து முத்து
முகப்பருக்கள் வசீகரம்

32 னில் ஒருசில இல்லாமலும்
ஒரு சில இருந்தும் இல்லாமலும்
இருந்தும், முத்துமுத்தாய்
உன் வாய்க்கு அழகு சொத்தாய்
விளங்கிடும் முத்து பற்களை உள்ளடக்கிய
உன் தடித்த உதடுகள் வசீகரம்

கடல் போன்ற காதலினை
காட்டாற்று வெள்ளத்தின் வேகத்தில்
கொண்டுவந்து கொண்டுவந்து
உன் கால் நனைக்க கொட்டினாலும்
வெறும் சொட்டுச்சொட்டாய்
காதல் அதை சொட்டிடும்
காதல் கிழட்டு குடுவை நீ வசீகரம்

எண்ணிட முனைந்திடின்
உன்னிடம் இதுவரை,
கொண்ட,கொள்கிற,இனி கொள்ளும்
காதலின் கணக்கினில் ஒப்பும்
பல லட்சத்தின் சொச்சங்களை
எட்டியும் ,இன்னும் மிச்சமிருக்கும்
வான் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றிற்கும்
சிறு மச்சத்திற்கும் இடம் கொடுக்காத
நின் மொழு மொழு மூக்கினில் மூக்குத்தியாய்
தற்காலிகமாயேனும் இருந்து,
பின் தற்கொலை செய்து முனைத்திடும்
உன் அழகு நாசி வசீகரம்....

கண்ணே !
காகிதப்பூவினிலும் தேன் கசிந்திடக்கூடும்
நின் எழில் கொஞ்சும் நாசியினால்
அப்பூதனை நீ முகர்ந்திடின் ...

ஆதலினால் தான் காதலியே !

நின் மூக்கினால் முகர்ந்திட முகர்ந்திட
மருகி மருகி மேனி உருகி உருகி
ஒரு கட்டத்தினில் மருங்குதலே பெருகி
ஆவியினையே ஆவியாய் ஆக்கிட
பாவிநான் இறைவனிடம்
ஓர் அரும் வரம் வேண்டினேன் !
Title: Re: சுவாசத்தால் பேசும் வசீகரியே !!
Post by: Maran on December 27, 2013, 07:54:01 AM
நல்ல தமிழ் புலமை, நல்ல  முயற்சி



Title: Re: சுவாசத்தால் பேசும் வசீகரியே !!
Post by: aasaiajiith on December 27, 2013, 10:39:17 AM
வந்தமைக்கும்
வாசித்தமைக்கும்
வாழ்த்தியமைக்கும்
 நன்றி !!!
Title: Re: சுவாசத்தால் பேசும் வசீகரியே !!
Post by: sasikumarkpm on December 31, 2013, 11:23:07 AM
adengappa.. :)
Title: Re: சுவாசத்தால் பேசும் வசீகரியே !!
Post by: aasaiajiith on January 01, 2014, 02:40:50 PM
வந்தமைக்கும்
வாசித்தமைக்கும்
வாழ்த்தியமைக்கும்
 நன்றி !!!