FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: RemO on November 21, 2011, 01:10:34 PM
-
எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்துடன் எதையும் டேக் ஈசியாக எடுத்துக்கொள்பவர்கள் ஒரு ரகம். எதற்கெடுத்தாலும் டென்சன் ஆகி கத்தித் தீர்ப்பவர்கள் ஒரு ரகம். டேக் இட் ஈசி ரக ஆட்கள் என்றைக்கும் ஒரே மாதிரி இருப்பார்கள். அவர்களின் அழகு என்றைக்குமே மாறாது. உடல்நலத்திற்கும் எந்த தீங்கும் ஏற்படாது. காரணம் அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பதுதான். ஆனால் டென்சன் பார்ட்டிகள் அழுது வடிந்து கொண்டு, வயதான தோற்றத்திற்கு தள்ளப்பட்டுவிடுவார்கள். நோயும் எளிதில் தாக்கத் தொடங்கிவிடும். அதற்குக் காரணம் அவர்களின் டென்சன்தான் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்தது.
பியூட்டி ப்ரெஸ் யாருக்கு?
இயற்கையான அழகு யாருக்கு கிடைக்கும்? என்கிற கோணத்தில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். 500க்கும் மேற்பட்ட இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம், தினமும் அவர்கள் மேற்கொள்ளும் செயல்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.
ஆய்வின் முடிவில் அடிக்கடி டென்ஷனாகஇருப்பவர்களைக் காட்டிலும் டென்ஷன் ஆகாமல் எதையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்பவர்கள் `ப்ரெஷ்’ ஆகவும், அழகாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அழகிற்கும் மனதிற்கும் தொடர்பு
அழகுக்கும் மனதிற்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. அந்த மனதை இயற்கையாக அதாவது, டென்ஷன் இன்றி வைத்துக்கொண்டால் முகமும் அழகாக இருக்கும்; உடலும் ஆரோக்கியமாக இருக்கும்’ என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் நம் முன்னோர்கள் மனதை அமைதியாக வைத்துக்கொண்டால் முதுமை நம்மை அண்டாது என்று தெரிவித்துள்ளனர்.
என்ன டென்சன் பார்ட்டிகளே நடப்பது நடந்துதான் தீரும். எனவே உங்கள் டென்சனை தூக்கிப்போடுங்கள் அழகாக மாறுங்கள்.
-
enakku denjan varuthu aana naa alagathaane irukeen :o
-
athu varama iruntha inum alaga irupa nee
-
உங்களால மட்டும் எப்படி எல்லாம் பொய் சொல்ல முடிது global angel
நல்ல பதிவு ரெமோ மச்சி
-
micro nee enda angel ah target panura\
ava rompa alagu