குதிரைவாலி வெஜிடபிள் அடை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2Fp46a.jpg&hash=3707160f0d3d9e0a3dccde4e099307ea6c3f6d60)
தேவையானவை:
மாவு அரைப்பதற்கு: குதிரை வாலி அரிசி, புழுங்கல் அரிசி - தலா ஒரு கப், துவரம்பருப்பு - முக்கால் கப், உளுந்து, பாசிப்பருப்பு - தலா ஒரு கைப்பிடியளவு, காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
மாவில் கலப்பதற்கு: கேரட் (சிறியது) - ஒன்று (துருவிக் கொள்ளவும்), துருவிய முட்டைகோஸ் - சிறிதளவு, குடமிளகாய் - பாதி அளவு (பொடியாக நறுக்கவும்), முருங்கை இலை ஒரு கைப்பிடி அளவு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவைக்கேற்ப.
செய்முறை:
அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை நான்கு மணி நேரம் ஒன்றாகவே ஊற வைத்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். பின் அடை மாவில் கலப்பதற்கு, கொடுக்கப்பட்ட பொருட்களை சேர்த்து நன்றாக கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை தோசைக்கல்லில் ஊற்றி... சுற்றிலும் எண்ணெய் விட்டு அடைகளாக சுட்டு எடுக்கவும்.
இதற்கு தேங்காய் சட்னி தொட்டுக் கொள்ளலாம்.