பேரீச்சம்பழ பூரி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2013%2F12%2Fnzyzgi%2Fimages%2Fp46.jpg&hash=9d061a43860fe2c48e03fbd8083ad7d8d62572ef)
தேவையானவை:
மைதா - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 5, புளி - சிறிதளவு, பேரீச்சம்பழம் - 100 கிராம், வெண்ணெய் - சிறிதளவு, இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மைதாவுடன் உப்பு, தேவையான நீர், சிறிது எண்ணெய் சேர்த்து நன்றாக அடித்துப் பிசையவும். காய்ந்த மிளகாயை வறுத்து... அதனுடன் உப்பு, புளி, பேரீச்சம்பழம் சேர்த்து அரைக்கவும். இதில் இஞ்சி - பூண்டு விழுதைக் கலக்கவும். மைதாவை சிறு பூரிகளாக செய்து, அதன் மீது சிறிது வெண்ணெய் தடவவும். பிறகு, பேரீச்சம்பழக் கலவையை தடவவும். பூரியை நான்காக மடித்து ஓரங்களை சிறிது நீர் தடவி நன்றாக அழுத்தி மூடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி பூரிகளை பொரித்தெடுக்கவும்.