FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on December 18, 2013, 06:10:17 PM

Title: ~ வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடுவதால் எந்தப் பலனும் இல்லை..?! ~
Post by: MysteRy on December 18, 2013, 06:10:17 PM
வைட்டமின் மாத்திரைகள் சாப்பிடுவதால் எந்தப் பலனும் இல்லை..?!

(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-frc3/1480641_547248728701784_1347315465_n.jpg)


உடலின் சக்தியை அதிகரிப்பதற்காக வைட்டமின் ஏ, பி என்று மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பது வழக்கம். அதையும் தாண்டி, தாங்களாகவே கடைகளில வாங்கி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கையும் சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த மாத்திரைகளை சாப்பிடுவதால் மட்டும் உடலுக்கு எந்த பலனும் கிடைத்து விடாது என பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்துள்ளனர். ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவில் இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதால் பண விரயம் மட்டுமே ஏற்படுகிறது என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்!

ம்ம்ம்... நம்ம தாத்தா பாட்டியெல்லாம், முருங்கைக்கீரையைச் சாப்பிடு, முளைக்கீரையைச் சாப்பிடுனு தன்னால சக்தி வந்துடும் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. ஆனா, அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிட்டு, வைட்டமின் மாத்திரைகளா முழுங்கறதுலதான் நம்மள்ல பலருக்கும் ஆர்வம். இனியாச்சும் இயற்கையாவே, அதாவது உணவுப் பொருள் மூலமாகவே வைட்டமின் சக்தியை ஏத்திக்கற வழியைப் பார்த்தா, பர்ஸ் மிஞ்சும்!