புருவம் அடர்த்தியாக இயற்கை முறையில் வளர:-
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/1525710_655654024456916_1745329419_n.jpg)
ஆமணக்கெண்ணெய்
ஆமணக்கெண்ணெயில் மற்ற எண்ணெயை விட அதிகமான அளவு மருத்துவ குணம் நிறைந்துள்ளது. அதிலும் கூந்தல் வளர்ச்சிக்கு இது மிகவும் சிறந்த எண்ணெய். இதற்கு இந்த எண்ணெயை புருவத்தில் தடவி, 2-3 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின் அரை மணிநேரத்திற்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில், கிளின்சரைப் பயன்படுத்தி கழுவிட வேண்டும். இதை தொடர்ந்து தினமும் செய்து வந்தால், புருவம் நன்கு வளரும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை
புருவம் குறைவாக இருப்பவர்கள், எலுமிச்சையின் தோலை தேங்காய் எண்ணெயில் போட்டு, ஊற வைத்து, பின் அந்த எண்ணெயை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த எண்ணெயை தினமும் இரவில் படுக்கும் முன் தடவிக் கொண்டு படுத்து, மறுநாள் காலையில் கழுவிட வேண்டும். சிலருக்கு எலுமிச்சையினால் எரிச்சல் ஏற்பட்டால், அதனை காலையில் சிறிது நேரம் செய்தால் போதுமானது. முக்கியமாக இதனை செய்யும் 2 மணிநேரத்திற்கு முன் வெயிலானது சருமத்தில் படக்கூடாது.
கற்றாழை
புருவம் மிகவும் மெல்லியதாக இருந்தால், அப்போது கற்றாழையின் ஜெல்லை தினமும் இரவில் படுக்கும் முன் தடவிக் கொண்டு படுக்க வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், புருவத்தில் கூந்தல் வளர்ச்சி அதிகமாக இருக்கும். மேலும் சருமத்தில் ஏதேனும் புண் இருந்தாலும் சரியாகிவிடும்.
வெங்காயம்
வெங்காயத்தில் உள்ள சல்பர் கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, வேகமாக வளரச் செய்யும். ஆகவே வெங்காயச் சாற்றை காட்டனில் நனைத்து தடவிக் கொள்ள வேண்டும். முக்கியமாக இதனை தடவியதும் கழுவிடக் கூடாது. கழுவாமல் இருந்தால் தான், இதன் முழு பயனை அடைய முடியும்.
வெந்தயம்
வெந்தயத்தை நன்கு அரைத்து, அதனை தினமும் இரவில் படுக்கும் முன் தடவிக் கொண்டு, மறுநாள் காலையில் எழுந்து கழுவிட வேண்டும். வேண்டுமென்றால் இதனுடன் சிறிது பாதாம் எண்ணெயையும் சேர்த்து செய்யலாம். இதனால் புருவம் நன்கு எண்ணெய் பசையோடு, சற்று அடர்த்தியாக இருப்பது போல் தோன்றும்.
பால் பொருட்கள்
பால் பொருட்களில் அதிகமான அளவில் புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் இருக்கின்றன. ஆகவே இரவில் தூங்குவதற்கு முன்பு, பாலை புருவத்தில் தடவி படுக்க வேண்டும். இதனால் பாலில் உள்ள இயற்கைப் பொருள் முடியின் வேர்களுக்கு ஒரு நல்ல ஈரப்பசையைத் தந்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.